சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் நிலை குறித்து நடிகர் கமல் ஹாசன் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்துள்ளார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், விஜய் தொலைக்காட்சியில் தனது நகைச்சுவையின் மூலம் மக்களிடம் பிரபலமானார்.
அதன் பின்னர் அஜித், விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்தார்.
ரோபோ சங்கர்: பல படங்களில் பிஸியாக நடித்து வந்த ரோபோ சங்கர், திடீரென உடல் எடை ரொம்பவே குறைந்து மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார். இணையத்தில் வெளியான அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இவர் உடல் நலம் குறித்து பலவிதமான வதந்திகள் இணையத்தில் பரவியது.
உடல் மெலிந்த ரோபோ சங்கர்: இதையடுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரோபோ சங்கர், நான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். அதோடு உடல் எடையை குறைத்துக்கொண்டு இருந்தேன் இரண்டும் சேர்ந்து என்னை இப்படி ஆக்கிவிட்டது. என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என்னுடைய நண்பர்களால் நான் பழையபடி மீண்டு வந்துள்ளேன் என்றார்.
நலம் விசாரித்த கமல்: இந்நிலையில் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து, நடிகர் கமல் ஹாசன் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தாக வீடியோ வெளியாகி உள்ளது. அதில், உடல்நிலை சரியாக பார்த்து கொள்ளுங்கள் என கமல் சொல்ல உடனே ரோபோ சங்கர், எல்லாத்தையும் மனைவி தான் பார்த்துக் கொள்கிறார். ஓய்வு, மருந்து எல்லாமே கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன்.
உங்களை கெட்டாமல்: என் ஆண்டவர் புண்ணியத்தில் எனக்கு எப்போதும் எதுவும் நடக்காது. என் மகளுக்கு இன்னும் ஒரு 6 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. உங்களின் ஆசீர்வாதம் மற்றும் உங்களின் பாதங்கள் பட்டு நடக்கவேண்டும். அது நடந்தால் என் பிறவி பலன் அடைந்துவிடுவேன். உங்களை கேட்காமல் திருமண தேதியை முடிவு செய்ய மாட்டேன் என்றார்.