விருதுநகர்: தமிழகத்தின் கிங் மேக்கர் என்று அனைவராலும் அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாளான இன்று தமிழக அரசு கல்வி திருநாளாக உலகெங்கிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காமராஜருக்கு தன்னுடைய சொந்த செலவில் கோவில் கட்டி பலருக்கும் உதவும் ஒரு நபரைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த காமராஜருக்கு அதே ஊரை சார்ந்த கே.எஸ் கணேசன் என்பவர் தன்னுடைய நிலத்தில் காமராஜருக்கு கோவில் கட்டி காமராஜர் பற்றி பல தகவல்களை இளம் சந்ததியினர்களுக்கு கூறிக் கொண்டிருக்கிறார்.
எந்த அரசியல் பின்புலமும், சாதி அடிப்படையும் இல்லாமல் கோவில் கட்டும் அளவிற்கு பாசம் எதனால் வந்தது என்று குறித்தும் கணேசன் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்று உலகெங்கிலும் மறைந்த காமராஜரின் புகழ் பரவிக் கொண்டிருக்கிறது. காமராஜர் மறைந்தாலும் அவருடைய புகழும் அவர் செய்த செயல்களும் என்றும் மறையாது அதனால் தான் இப்போதும் பல அரசியல் கட்சி தலைவர்களும் கூட நாங்கள் காமராஜர் போல ஆட்சி செய்வோம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்கள் யாரும் அவர்களை அவர்கள் உதாரணமாக கூறிக் கொள்வது கிடையாது.
இதுவரைக்கும் சரி இனிமேலும் சரி காமராஜரை போல ஒரு அரசியல் தலைவர் உருவாக முடியாது என்ற ஒரு நிலைமையை தான் காமராஜர் உருவாக்கி வைத்திருக்கிறார் தன்னுடைய சொந்த குடும்பத்தை விடவும் எனக்கு என்னுடைய மக்கள் தான் முக்கியம் என்று ஒரு தகப்பனாக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தி வைத்து விட்டு இருக்கிறார்.

இதையெல்லாம் இன்று நாம் பலரும் பேசிக் கொண்டிருக்கிறோம் அதே நேரத்தில் காமராஜர் பிறந்த விருதுநகர் ஊரில் அவரை பார்த்து வியந்து போன ஒரு நபர் காமராஜருக்காக தன்னுடைய சொந்த இடத்தில் ஒரு கட்டிடத்தை கட்டி அதில் கல் தேரில் கம்பீரமாக காமராஜர் அமர்ந்திருப்பது போன்று ஒரு சிலையை நிறுவி காமராஜர் பற்றிய பல புத்தகங்களையும் அவருடைய அரிய புகைப்படங்களையும் பாதுகாத்து இளம் தலைமுறைக்கு காமராஜர் பற்றி பல தகவல்களை எடுத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவர் பெயர் கே எஸ் கணேசன் அவருக்கு மனைவியும் ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கின்றனர் சின்ன வயதில் இருக்கும்போதே காமராஜர் மீது இவருக்கு அளவு கடந்த அன்பு இருந்திருக்கிறது அதுவும் இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது காமராஜரின் சொற்பொழிவு விருதுநகரில் நடக்கும் போது தூரமாக இருந்து கேட்டிருக்கிறார் அதுபோல அடிக்கடி வீட்டிலும் ஒரு காமராஜர் பற்றி பேசுவதை கேட்டிருக்கிறார் அப்போதே இவருக்குள் காமராஜர் மீது அளவுக்கு அதிகமான அன்பு தோன்றி விட்டதாம்?

ஸ்கூல் படிக்கும்போதே காமராஜர் பற்றி எந்த செய்திகள் வந்தாலும் அதை தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொள்வாரா? இவருடைய நடவடிக்கையை பார்த்து இவருடைய நண்பர்களும் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் அதிகமாக நாளிதழ்கள் இல்லாத நேரமாக இருப்பதால் கிடைக்கும் இடங்களில் காமராஜர் பற்றிய சிறு புகைப்படம் இருந்தாலும் அவரைப் பற்றிய செய்திகள் இருந்தாலும் உடனே கணேசா இங்க ஒரு விஷயம் வந்து இருக்கு வா என்று அழைத்து இவருக்கு அதை கொடுத்து விடுவார்களாம்.
கணேசனும் அதையெல்லாம் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிற ஆனால் அப்போது தான் அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று தோணவில்லையாம் பிறகு பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார் கல்லூரி படிப்பு படிக்கும்போதும் இவருடைய காமராஜர் பற்றிய பாசம் மட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லையா அதற்குப் பிறகு தனக்குன்னு ஒரு வேலை கிடைத்திருக்கிறது அதில் நிரந்தர வருமானமும் வந்திருக்கிறது.

விருதுநகரில் தாய் பதிப்பகம் என்று ஒரு பதிப்பகத்தை வைத்திருக்கிறார் அதில் இவருக்கு கிடைத்த வருமானத்தை வைத்து இவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் காமராஜருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னுடைய சொந்த இடத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக கட்ட தொடங்கி இருக்கிறார் நண்பர்கள் தனக்கு கொடுத்த புத்தகங்கள் போன்றவற்றை அந்த கோவிலில் வைத்து பலருக்கும் பயன்படும் வகையில் வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் காமராஜர் பற்றி பிஹெச்டி படித்தவர்களின் ப்ராஜெக்ட் பலவற்றையும் இவர் அந்த இடத்தில் சேர்த்து வைத்திருக்கிறார் இதனால் இனிம்கூட யாரேனும் காமராஜர் பற்றி பண்ண வேண்டும் என்றால் என்னிடம் வந்து இருக்கும் புத்தகங்களை வைத்து தாராளமாக இலவசமாகவே பண்ணலாம் அதற்காக என்ன பண்ணனும் அதை நான் செய்து கொடுக்கிறேன் என்றும் கூறி இருக்கிறார்.
இத்தனையும் செய்வதற்கு என்ன காரணம் என்று நாம் அவரிடம் கேட்கும் போது அவர் சொன்ன வார்த்தை தான் நெருட வைத்தது நான் சின்ன பையனா இருக்கும்போது எங்க அம்மா அப்பா நெல்லு வித்து தான் சாப்பாடு போட்டாங்க நல்லா அவிச்சு அதை குத்தி கடை கடையா கொண்டு போய் விக்கிறது தான் எங்க அம்மாவோட வேலை எங்க அப்பா வண்டி இழுக்கிற வேலை பார்த்தாங்க அந்த நேரத்துல நான் படிக்கிறதுக்கு எனக்கு உதவியா இருந்தது காமராஜர் கொடுத்த சலுகைகள் தான்.
எல்லாரும் சொல்லுவாங்க அது கவர்மெண்ட் கொடுத்த சலுகையாலதான்னு ஆனா நான் காமராஜர் பீரியடில் படித்ததால் காமராஜர் தான் எனக்கு தந்தது என்று நான் சொல்லுவேன் அவரால் நான் படிச்சு முடிச்சு இப்போ ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் அதற்கு கைமாறாக தான் நான் காமராஜருக்கு கோயில் கட்டி வைத்திருக்கிறேன் என்று சிரித்தபடியே கணேசன் சொல்லி முடித்திருக்கிறார்.