மஞ்சள் எச்சரிக்கை… வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லிக்கு சோதனை மேல் சோதனை!

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், சண்டிகர், உத்தரகாண்ட் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. பல அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் யமுனை ஆற்றுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205 மீட்டரை தாண்டியது.

‘என் சூப்பர் மேன்’… அமீர் பிறந்த நாளில் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்ட பாவனி ரெட்டி!

தொடர்ந்து அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208 மீட்டரை தாண்டியது. இதனால் யமுனை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் டெல்லி நகர் பகுதிக்குள் நுழைந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

சிவில் லைன்ஸ் ஏரியா, யமுனா பேங்க், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் மார்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் டெல்லி மாநகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோழிக்கறி குழம்பு வைக்காத மனைவி… கோடரியால் வெட்டிக் கொன்ற கணவன்… போலீஸ் வலைவீச்சு!

இந்நிலையில் மழை பொழிவு குறைந்தால் அடுத்த 24 மணிநேரத்தில் டெல்லியில் வெள்ளம் படிபடியாக வடியும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டெல்லி வெள்ள நிலவரம் குறித்து போனில் கேட்டறிந்தார்.

டெல்லி வெள்ளக்காடாக காட்சியளித்து வரும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனிடையே டெல்லியில் இன்று மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னமும் கண்ணாமூச்சி ஆடினால்… அமலாக்கத்துறை மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழையும்… திகில் கிளப்பும் ஹெச் ராஜா!

லக்ஷ்மி நகர், அயநகர், லோதி சாலை, முங்கேஷ்பூர் மற்றும் கிழக்கு டெல்லியின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்த நிலையில், இன்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் டெல்லியின் நிலைமை இன்னும் மோசமாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.