அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகள், புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல், தங்களுடைய – தங்களை சார்ந்த மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக கருதி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத் திட்டத்தில், வடக்கின் ஒளிமயம் எனும் தொனிப் பொருளில் யாழ் முற்றவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.