வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்த விவகாரத்தில், அதன் உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள ஹோட்டலில், 10ம் தேதி காதல் ஜோடி தங்கினர்.
அப்போது, அறையில் உள்ள எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில், இன்டர்காம் பிளக் பாயின்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ந்தனர். காதலர்கள், உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஹோட்டல் அறையில் சோதனை செய்து, கம்ப்யூட்டர் சி.பி.யூ., கேமரா, ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் டிவைஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பினர்.
மேலும், ஹோட்டலுக்கு, 15 நாட்களில் வந்து சென்றவர்கள் விபரங்களை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். அறையில் கேமரா பொருத்த அனுமதித்த உரிமையாளர் இளைய ஆழ்வார், 45, மேலாளர் இருதயராஜ், 59, ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர். தேங்காய்த்திட்டு, வசந்த் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஹோட்டல் பராமரிப்பாளர் ஆனந்த், 25, அரியாங்குப்பம் ஓடைவெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம், 22, ஆகியோரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement