சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் உட்பட சில அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
வரும் 17ம் தேதி ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்துக்கு லேட்டாக செல்ல வேண்டாம், முதல் காட்சியில் இருந்தே பார்த்துவிடுங்கள் என ரசிகர்களுக்கு பிரபலம் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயிலர் ஃபர்ஸ்ட் சீன்ல தரமான சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி ஜெயிலர் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. அதன்பின்னர் டீசர், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டாருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக ஜெயிலர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனை இன்னும் எகிற வைக்கும் வகையில் மாஸ்ஸான அப்டேட் கொடுத்துள்ளார் ஜெயிலர் ஸ்டண்ட் கோரியோகிராபர் கெவின். ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதுவரை வெளியான தகவல்களின் படி, ரஜினி ஜெயிலர் ரோலில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இதில் செம்ம ட்விஸ்ட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று மாலை வெளியான ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ப்ரோமோவில் ரஜினியின் மாஸ் லுக் ஒன்று இணையத்தை கலங்கடித்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து அதில் பணியாற்றியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் கெவின் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது ஜெயிலர் படத்தை பார்க்க தியேட்டருக்கு லேட்டாக செல்ல வேண்டாம் என அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஏனெனில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியில் இருந்தே தலைவரின் சம்பவம் ஸ்டார்ட் ஆகிவிடும். அதன்பிறகு வரும் ஒவ்வொரு சீனும் ரஜினி ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட் தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்திற்காக இயக்குநர் நெல்சன் செம்ம மாஸ்ஸான திரைக்கதையை எழுதியுள்ளார் என்றும், இதனால் ஜெயிலரில் சூப்பர் ஸ்டாரின் ஆட்டம் அதகளமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைப் போல ஜெயிலர் திரைக்கதையும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் எனவும் ஸ்டண்ட் கோரியோகிராபி கெவின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த லிஸ்ட்டில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் கெவினின் அப்டேட்டால், ரஜினி ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.