Jailer: ஜெயிலர் படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..டைட்டில் மாற்றப்படுமா ?

​எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.மேலும் ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பதால் இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது

​வரவேற்பை பெற்ற காவாலாஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படக்குழு தற்போது ப்ரோமோஷன் வேலைகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. அந்த வகையில் ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. ரஜினி இல்லாமல் தமன்னாவை முன்னிலை படுத்தி அப்பாடலை நெல்சன் வெளியிட்டார். இருந்தாலும் அப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூபில் இப்பாடல் பல சாதனைகளை செய்து வருகின்றது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் அடுத்த பாடலுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்

​அடுத்த பாடல்காவாலா பாடலை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் என்ற பாடல் வெளியாக இருக்கின்றது. இம்முறை ரஜினியின் பாடல் வெளியாக இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு இருக்கின்றது. ஒரு மாஸான பாடலாக ஹுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்பாடல் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இப்பாடலின் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.குறிப்பாக இப்பாடலின் ப்ரோமோ ரஜினியின் குரலில் இருப்பதால் ரசிகர்கள் இப்பாடலை கேட்க ஆவலாக இருக்கின்றனர்

​சிக்கல்இந்நிலையில் ஒருபக்கம் ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் ஜெயிலர் படத்திற்கு திடீரென ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜெயிலர் படம் வெளியாகும் அதே சமயத்தில் மலையாளத்தில் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகின்றது. எனவே ஒரே சமயத்தில் ஒரே பெயரில் இரு படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என மலையாள ஜெயிலர் படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பையும் மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ரஜினியின் ஜெயிலர் படக்குழு கண்டிப்பாக தலைப்பை மாற்றப்போவதில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளார்களாம். ஜெயிலர் என்பது கதைக்கு மிகவும் பொருத்தமான டைட்டிலாக இருப்பதால் கண்டிப்பாக படக்குழு இந்த டைட்டிலை மாற்றாது என்பது உறுதியாகியுள்ளது. எனவே ஜெயிலர் திரைப்படம் எந்த வித சிக்கலும் இன்றி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.