அடுத்த குறி உதயநிதிக்கா? ஹெச் ராஜா பரபரப்பு தகவல்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கு தமிழக அரசு துணை போவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றதையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தமிழர் விரோதபோக்குடன் செயல்படுவதாக தமிழக பாஜக நிர்வாகிகள் நேற்று கறுப்பு சட்டை அணிந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.அந்த வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே மேகதாது அணை கட்டுவோம் என குறிப்பிட்டபோது முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருந்தார் என குற்றம்சாட்டினார்.

தற்போது மேகதாது அணைக்கு நடக்கும் பூமி பூஜையில் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்றார். காவிரி விஷயத்தில்

60 ஆண்டுகளாக தமிழகர்ளுக்கு துரோகம் செய்து வருகிறது என்றும் ஹெச் ராஜா சாடினார். தொடர்ந்து பேசிய அவர், பொன்முடி கைதாவர் என்று தான் ஏற்கனவே சொன்னதாகவும் அடுத்து அமலாக்கத்துறை சோதனை திருச்சி அல்லது தூத்துக்குடி அல்லது மதுரையாக கூட இருக்கலாம் என்றும் கூறினார்.

தமிழகத்தை தூய்மைப்படுத்த மக்கள் மோடியின் பின்னால் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஹெச் ராஜா, தமிழகம் தலைநிமிர, திமுக, திக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறிய விஷயத்துக்கு கூட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்சிஜென்சி உள்ளது என்றும் ஹெச் ராஜா விளாசினார்.

இதற்கெல்லாம் பாஜக பயப்படாது என்ற ஹெச் ராஜா, பட்டியலிட்டு தூக்க வேண்டியவர்களை தூக்கிவிடுவோம் என்றும் கூறினார். பொன்முடி, அவரது மகனுடன் தொடர்பில் இருப்பதால் 24 மணி நேரத்தில் அமைச்சர் உதயநிதி வீட்டில் கூட அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.