தமிழக அரசு நியமித்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள்… எந்தெந்த மாவட்டங்கள்? கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், மூன்று மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்,

கர்நாடகா அரசை ஸ்டாலின் ஏன் எதிர்க்கவில்லை?

மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள்

அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் – ராமநாதபுரம்நந்தகோபால் ஐஏஎஸ், விவசாயம், விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளர் – திருப்பத்தூர்ரீடா ஹரிஷ் தக்கார் ஐஏஎஸ், பி.சி, எம்.பி.சி மற்றும் எம்.டபுள்யூ செயலாளர் – திருப்பூர்

மாவட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள்

இந்த அதிகாரிகள் எந்தெந்த பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்? என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி முடங்கி கிடக்கும் பணிகளை வேகமெடுக்க செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கொள்ள வேண்டிய பணிகள்

நீர் பாதுகாப்பு, குடிமராமத்து, அணைகள் கட்டுமானம், நீர் நிலைகள் மறுசீரமைப்பு, ஊரணிகள், கோயில் தொட்டிகள், பாசனத் தொட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்வது அவசியம். மீண்டும் ஆக்கிரமிப்புகள் நிகழாத வண்ணம் ஒழுங்குபடுத்த வேண்டும்.

அரசின் திட்ட செயல்பாடுகள்

மாநில அரசின் முக்கியமான திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நிலுவையில் உள்ள பட்டா மாறுதல், பொதுமக்களின் குறைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கழிவு மேலாண்மை

கிராம மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் திடக் கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள்

பிளாஸ்டிக் தடை, நெடுஞ்சாலைத்துறை பணிகளில் நில ஆக்கிரமிப்புகளை விரைவுபடுத்துதல், அனைத்து பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறைகள் போன்ற வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.