சென்னை: பெரிய நடிகர்களின் படங்களும் கோடி கோடியாக சம்பளமும் கிடைக்குதே என கதை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு லைன் ஸ்க்ரிப்ட் கூட கேட்காமல் தொடர்ந்து நடித்து வந்த அந்த கால் அழகிக்கு தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லாத நிலை உருவாகி விட்டதாம்.
தன்னுடைய அழகை காட்டியே பட வாய்ப்பை பெற்று விட்டு ஹிட் அடித்து விடலாம் என ஆரம்ப காலக்கட்டத்தில் மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்த அந்த நடிகைக்கு நடிக்கவே தெரியாத நிலையில் அவர் நடித்த சில படங்கள் ஃபிளாப் ஆனதும் மற்ற மொழி சினிமாவில் நடிக்க ஓடிப் போய்விட்டார்.
ஆனால், அங்கேயும் அவருக்கு ஒன்றும் பெரிதாக உருப்படியாக ஒரு படம் கூட வெற்றிப் பெறவே இல்லை.
ஓடிய ஒரு படம்: அந்த நடிகை ஒப்பந்தம் ஆனதிலேயே பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஓடியது என்றால் அந்த ஒரு படம் மட்டும் தான் என கடந்த சில ஆண்டுகளில் கூற முடிகிற அளவுக்கு உள்ளது. அந்த படம் கதை காரணமாக ஹிட் அடித்த நிலையில், அதில் ஒரு பெரிய நல்ல விஷயம் என்னவென்றால் நடிகை நடனமாடிய பாடல் உலகளவில் பிரபலமாக பல்வேறு முன்னணி நடிகர்கள் இந்த நடிகையை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர்.
வாய்ப்புக் கிடைத்தவுடனே வானத்தில்: தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அந்த நடிகையை வரிசையாக கமிட் செய்த நிலையில், நடிகைக்கு தலைகால் புரியாமல் வானத்துக்கும் பூமிக்கும் ஆட ஆரம்பித்தார்.

தயாரிப்பாளரின் பணத்தை தாராளமாக நடிகை காலியாக்கிய நிலையில், அவர் நடித்த மற்ற எந்தவொரு படங்களும் ஓடாமல் படு தோல்வியை சந்திக்க தற்போது நடிகையின் மார்க்கெட்டும் காலியாகி விட்டதாம்.
ஒரு படமும் இல்லை: முன்னணி ஹீரோக்கள் இந்த நடிகையின் ஜோடி போட்டு நடித்த படங்கள் ஹிட் அடிக்காத நிலையில், அடுத்தடுத்து இளம் ஹீரோயின்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து வரும் நிலையில், அம்மணிக்கு ஒரு படம் கூட தற்போது கைவசம் இல்லை என்கின்றனர்.
இதனால் மனவேதனையில் வாடி வரும் நடிகை சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்றும் டயர் 2 மற்றும் டயர் 3 நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கவும் தயார் என புதிய வலையை வீசி உள்ளாராம்.