முதல் முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா – கார்த்தி..இயக்குனர் யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் துவங்கி தொடர்ந்து வித்யாசமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து அதில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்று வரும் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படமும் வழக்கமான படமாக இல்லாமல் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வருகின்றதாம். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Thalapathy vijay: நான் பழசை மறக்கமாட்டேன்..சூப்பர்ஸ்டார் டைட்டில் பற்றி ஓபனாக பேசிய விஜய்..!

இதைத்தொடர்ந்து கார்த்தி மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இந்தாண்டு உருவாவதாக இருந்த நிலையில் லோகேஷ் ரஜினியின் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளதால் கைதி 2 திரைப்படம் ரஜினியின் படத்திற்கு பிறகு தான் உருவாகும் என தகவல்கள் வருகின்றன.

கார்த்தியின் கைதி 2

தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கிவிட்டு தான் கைதி 2 படத்தை இயக்குவாராம். இதனை லோகேஷ் கனகராஜே தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று தான் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக வந்த தகவல் தான் அது. என்னவென்றால் லோகேஷ் இயக்கும் கைதி 2 திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்து மிரட்டியிருந்தார்.

வெறும் ஐந்து நிமிடங்கள் தான் சூர்யா விக்ரம் படத்தில் நடித்திருந்தார் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை வைத்தே லோகேஷ் ஒரு முழு படத்தை இயக்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

வில்லனாக சூர்யா

இந்நினையில் கைதி படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர் பிரபு, கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தையும் இணைக்குமாறு லோகேஷிடம் கூறியுள்ளார். மேலும் சூர்யாவை கைதி 2 படத்தில் நான் நடிக்க வைக்கின்றேன் எனவும் லோகேஷிடம் கூறியுள்ளார் எஸ்.ஆர் பிரபு.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே லோகேஷும் கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை சேர்க்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இதையடுத்து கைதி 2 திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், சூர்யா வில்லனாகவும் நடிக்கும் பட்சத்தில் அது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.