டி.ஆர்.பாலு மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்… பற்றி எரியும் மணிப்பூர் விவகாரம்… கைகோர்த்த எதிர்க்கட்சிகள்!

மணிப்பூர் நடந்த நிகழ்வுகள் தொடர்பான வீடியோ வெளியாகி, மிகக் கொடூர சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன எனக் கூறுகின்றனர். அப்படியெனில் இன்னும் மறைக்கப்பட்ட குற்றங்கள் எத்தனை, எத்தனை? என நெஞ்சம் பதறுகிறது. வீடியோவை தற்போது வெளியிட வேண்டிய காரணம் என ஒருதரப்பு கேள்விகள் எழுப்பி வருகிறது. எப்போது வெளியிட்டால் என்ன? அதில் நடந்த கொடூரங்களுக்கு தீர்வு என்ன? என மற்றொரு தரப்பு கேட்கிறது.

மணிப்பூர் விவகாரம்

பிரதமர் மோடி சொன்னது போல 140 கோடி மக்களையும் தலைகுனிவிற்கு ஆளாக்கிய சம்பவம் தான் இது. நாகரிக சமூகத்தில் இப்படியான நிகழ்வை அனுமதிக்கவே முடியாது. விஷயம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து கைது நடவடிக்கை, உரிய விசாரணை என விளக்கம் அளித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்கட்டும். மணிப்பூர் கலவரம் எத்தனை மாதங்களாக நடந்து வருகிறது. அதை ஒடுக்க ஏன் முடியவில்லை என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வி.

பாஜக அரசு ஏன் செய்யவில்லை

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி தான். எனவே கலவரத்தை இரும்பு கரம் கொண்டு எப்போதே அடக்கியிருக்கலாம். ஏன் வளரவிட்டார்கள்? என அரசியல் கண்கள் கொண்டு பார்க்க வைக்கிறது. இந்த விவகாரம் சரியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் எழுப்பப்பட்டிருக்கிறது. எதை திசை திருப்ப இப்படி ஒரு முயற்சி? ஏன் இப்படி செய்கிறார்கள்? என குழப்பங்களுக்கு பஞ்சமில்லை.

நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் ஆளும் பாஜகவை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு இன்று திமுக எம்.பி கூட்டம் நடைபெற்றுள்ளது

டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மானம்

இந்நிலையில் தான் மக்களவையில் அனைத்து விவகாரங்களையும் ஒத்திவைத்து விட்டு மணிப்பூரில் நடந்த விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவையில் அனுமதி அளிக்குமாறு
திமுக
எம்.பி டி.ஆர்.பாலு இன்றைய தினம் (ஜூலை 21) ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார். கடந்த இரண்டரை மாதங்களாக அரசு ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்

மணிப்பூர் சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒத்திவைப்பு தீர்மானம் டி.ஆர்.பாலு உடன் நிற்கவில்லை. திமுக எம்.பி திருச்சி சிவா,
காங்கிரஸ்
எம்.பி மாணிக்கம் தாகூர், மணிஷ் திவாரி, ராஜீவ் சுக்லா, கவுரவ் கோகோய், சக்திசின் கோஹில்,

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா?

சயத் நசீர் ஹுசைன், ரஞ்சீத் ரஞ்சன், பிரமோத் திவாரி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ராகவ் சதா, ராஷ்டிரிய ஜனதா தள் எம்.பி மனோஜ் குமார் ஜா, பாரதிய ராஷ்டிர சமிதி எம்.பி கேசவ ராவ் ஆகியோர் மக்களவை, மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரது கோரிக்கையும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பது தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.