விக்ரம் படத்தின் அந்த சீன் ஹாலிவுட் படத்தின் காப்பியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த விக்ரம் திரைப்படத்தின் அந்த காட்சி ஹாலிவுட் படத்தின் காபி என்று இணையத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானத் திரைப்படம் விக்ரம். மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படத்தில் கமல் ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி சங்கர் என பலர் நடித்திருந்தனர்.

கமலின் விக்ரம்: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தற்போது தளபதி விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு லோகேஷ் கனகராஜ் சினிமா மவுசு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

vikram movie scene copied from enter the dragon movie netizens trolled

ஹாலிவுட் படத்தின் காபியா: இந்நிலையில், விக்ரம் படத்தில் வரும் சீன் ஹாலிவுட் திரைப்படத்தின் காபி என்று இணையத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது கமல்ஹாசன் விலைமாதுவிடம் செல்வது போல ஒரு காட்சி இருக்கும். அதில் விலைமாதுவாக மாயா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் அந்த காட்சி பரவலாக பேசப்பட்டது.

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்: இந்த சீன் புரூஸ்லீ நடித்து 1973ம் ஆண்டு வெளியான enter the dragon என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் காட்சி என்று அந்த திரைப்படத்தின் வீடியோவையும், விக்ரம் படத்தின் வீடியோவையும் வெளியிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ், லோகேஷ் கனகராஜ் அட்லீயை மிஞ்சிடுவார் போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விக்ரம் படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான Better Call Saul என்ற ஆங்கில வெப் தொடரின் காபி என்று செய்திகள் பரவி குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.