சென்னை: நடிகை நயன்தாரா தனது 75வது படத்தில் நடித்து வரும் நிலையில், அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல் ஒன்று பரவி வருகிறது.
ரஜினிகாந்த் உடன் தர்பார், அண்ணாத்த படங்களில் நடித்த நயன்தாரா, மலையாளத்தில் பிரித்விராஜின் கோல்டு படத்திலும் நடித்தார். மேலும், உமன்சென்ட்ரிக் படங்களான நெற்றிக்கண், ஓ2, கனெக்ட் என கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை.
காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சுமாராக ஓடிய நிலையில், உடனடியாக திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால், நயன்தாரா கைவசம் தற்போது ஜவான் என்கிற பிரம்மாஸ்திரமே உள்ளது.
அட்லீ பண்ண பெரிய உதவி: ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்த நிலையில், தனது லக்கி சார்மான நயன்தாராவை தான் ஹீரோயின் ஆக்க வேண்டும் என ஷாருக்கானிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஷாருக்கானும் இது உங்க படம் நீங்க யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாகவும், வில்லனாகவும் போடுங்கள், எனக்கு படம் நல்லா வரணும் அவ்ளோ தான் என ஃபுல் ஃப்ரீடம் கொடுக்கவே பாலிவுட் நடிகையாக மாறினார் நயன்தாரா என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.

ஷாருக்கான் ஜோடி: ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடிக்க ஓகே சொல்லவில்லை என்றால், அட்லீக்கு அந்த படம் பெரிய பிரேக் த்ரூ படமாக மாறியிருக்காது, என்பதால் எப்போதுமே நயன்தாராவிடம் அட்லீக்கு நல்ல நட்பு வட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்து குசேலன் படத்தில் இணைந்து நடித்தார். அதன் பின்னர் தர்பார் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, தற்போது ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுக்கே ஜோடியாக மாறிய நிலையில், தனது மார்க்கெட்டை மேலும், உயர்த்தும் முடிவில் தீவிரம் காட்டி வருகிறார் என்கின்றனர்.

சம்பளத்தை உயர்த்திய லேடிசூப்பர்ஸ்டார்: இயக்குநர் ஷங்கரின் மற்றொரு உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணபூரணி என்கிற டைட்டிலில் உருவாகி வந்த நயன்தாராவின் 75வது படத்தின் டைட்டில் தற்போது பூரணி என மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஷாருக்கான் படத்தில் நடித்து முடித்த நிலையில், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட 10 கோடி சம்பளம் பத்தாது என்றும் தற்போது தனது மார்க்கெட் 12 கோடியாக உயர்ந்து விட்டது என்றும் கூடுதல் சம்பளத்தையும் தர வேண்டும் என நயன்தாரா கேட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. ஹீரோக்கள் ஒரு பக்கம் 150 கோடி, 200 கோடி என சம்பளத்தை உயர்த்திக் கொண்டு போனால், லேடி சூப்பர்ஸ்டார் மட்டும் என்ன சும்மா விடுவாரா? என்றும் அவர் கேட்பதும் நியாயம் தான் என்றும் ஆதரவான கருத்துக்களும் பரவி வருகின்றன.