Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' படத்தில் அதிரடி மாற்றம்: ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கமா.?

‘விக்ரம்’ நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்போது இந்தப்படத்தினை மீண்டும் தூசி தட்டி ரிலீசுக்கான வேலையை செய்து வருகின்றர் படக்குழுவினர். இந்நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் விக்ரம் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக உருவான இதில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகம் பெரியளவில் ஒர்க்கவுட் ஆகிவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து தான் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றினை கூறும் விதமாக ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. விக்ரம், கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருந்தது.

Aneethi Review: அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

இதனையடுத்து தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் வெளியான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடலின் யூடிப் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், படத்தில் அவரது காட்சிகள் தூக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக விக்ரமின் ‘மகான்’ படத்தில் வாணி போஜன் சம்பந்தமான காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jailer Audio Launch: தலைவரோட மாஸ் ஸ்பீச் ரெடி: சரவெடியாய் வெளியான அறிவிப்பு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.