Samantha: மாலை 6 மணிக்கு மேல் இதை மட்டும் செய்யவே மாட்டார் சமந்தா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார். தினமும் நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுகிறார்.

நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்

காலையில் ஜூஸ் குடிக்கும் சமந்தா, மாலையில் ஒரு கப் கிரீன் டீ குடிக்கிறார். இரவு நேர உணவை 6 மணிக்கு முன்பே சாப்பிட்டுவிடுகிறார். சூப், வேக வைத்த காய்கறிகளை தான் இரவு நேர உணவாக எடுத்துக் கொள்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சமந்தா என்ன நாம் மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் இரவு உணவை சாப்பிடுகிறார் என்கிறார்கள் ரசிகர்கள். சமந்தா மட்டும் அல்ல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபும் 6 மணிக்கு தான் இரவு உணவை சாப்பிடுகிறார்.

சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு நேரத்தோடு தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா. குறைந்தது 8 மணிநேரம் தூங்குகிறார். நன்றாக தூங்குவதும் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்கிறார்.

தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. தனக்கு அந்த நோய் இருப்பதை கண்டறிந்து ஓராண்டு ஆனது குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார்.

மயோசிடிஸுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே படங்கள், வெப்தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து தான் மேல் சிகிச்சை பெற நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.

சிகிச்சை பெறுவதுடன், ஓய்வு எடுப்பதும் முக்கியம் என நினைத்து இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார். கையில் இருந்த குஷி படம் மற்றும் சிடாடல் வெப்தொடரில் நடித்துக் கொடுத்துவிட்டார். இதையடுத்து புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

குஷி, சிடாடல் ஷூட்டிங் முடிந்ததும் கோவில், கோவிலாக சென்று உடல்நலம் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார் சமந்தா. முதலில் வேலூரில் இருக்கும் பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Samantha: உடல்நலம் சரியாகணும்: பொற்கோவிலை அடுத்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்ற சமந்தா

அவருடன் லியோ பட தயாரிப்பாளர் ஜெகதீஷ் சென்றிருந்தார். பொற்கோவிலை அடுத்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார் சமந்தா. கோவிலில் சமந்தாவை பார்த்ததும் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். சமந்தாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துச் சென்றார்கள்.

இதற்கிடையே ஈஷா மையத்திற்கு சென்று தான் தியானம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யத் தவறாத சமந்தா, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தியானமும் செய்கிறார். அவ்வப்போது தியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார். இந்நிலையில் தான் ஈஷா மையத்திற்கு சென்றிருக்கிறார்.

சமந்தாவுக்கு உடல்நிலை தேற வேண்டும் என அவருக்காக ரசிகர்களும் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற நேரத்தில் துணை இல்லாமல் தனியாக கஷ்டப்படுகிறாரே. சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லையா என ரசிகர்கள் புலம்புகிறார்கள். விவாகரத்திற்கு பிறகு இருவரும் அந்த கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை ரசிகர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். காதல் மனைவியான சமந்தாவை பிரிந்தாலும் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார் நாக சைதன்யா. இது தான் ரசிகர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்க காரணம் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.