Vijay Varma:எப்ப கல்யாணம்னு அம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க: தமன்னாவின் காதலர் விஜய்

பாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வரும் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலித்து வருகிறார்கள். காதலை அண்மையில் தான் உறுதி செய்தார் தமன்னா.

நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்
இந்நிலையில் வீட்டில் தனக்கு ஏகப்பட்ட பிரஷர் கொடுப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் வர்மா. அவர் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன். எங்கள் சமூகத்தில் பையன்களுக்கு 16 வயது வந்தாலே திருமண வயது வந்துவிட்டது என நினைப்பார்கள். அதனால் திருமண விவகார பேச்சு ஏற்கனவே துவங்கி, அடங்கிவிட்டது. நான் திருமண வயதை தாண்டிவிட்டதால் அந்த பேச்சு அடங்கியது. மேலும் நான் நடிகராகிவிட்டேன். அதனால் யாரும் அது பற்றி பேசவில்லை.

என் அம்மா இன்னும் திருமணம் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் கல்யாணம் பற்றி பேசுவார் அம்மா. நான் அதற்கு பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிவிடுவேன் என்றார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்தொடரில் சேர்ந்து நடித்தபோது தான் விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சக நடிகரை காதலிப்பேன் என நினைத்து பார்க்கவே இல்லை என்றார் தமன்னா.

விஜய்யிடம் பிடித்த குணம் என்னவென்று கேட்டதற்கு, தமன்னாவோ,

அவர் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். நான் உருவாக்கி வைத்திருக்கும் உலகத்தை மாற்ற அவர் நினைக்கவில்லை. என் உலகத்தை புரிந்து கொண்டு ஏற்றுள்ளார். என் சந்தோஷமான இடம் விஜய் என்றார்.

விஜய்யும், தமன்னாவும் காதலை ஒப்புக் கொண்ட பிறகு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். எப்பொழுது தான் திருமணம் செய்வாய் என விஜய்யிடம் அவரின் அம்மாவும் கேட்டு வருகிறார்.

விஜய்யும் சரி, தமன்னாவும் சரி அவரவர் படங்கள், வெப்தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்கள். திருமணம் பற்றி இருவருமே இதுவரை எதுவும் பேசவில்லை. அதனால் அவர்களாக அறிவிக்கும் வரை காத்திருக்க முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.

Vijay: சக்சஸ்: அரசியலுக்கு வரும் விஜய்யை தேடி வந்த குட் நியூஸ்

கெரியரை பொறுத்தவரை தமன்னா தற்போது சூப்பர் சந்தோஷமாக இருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் தமன்னா.

அந்த படத்தில் வரும் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். தமன்னாவின் காவாலா பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. குட்டீஸ் முதல் பாட்டி வரை அனைவரும் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

காவாலா பாடல் டாக்டர்களையும் சும்மாவிடவில்லை. அவர்களும் காவாலா காவாலானு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி அனைவரும் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடுவதுடன், தன்னை பாராட்டுவதை பார்த்து தமன்னா சந்தோஷத்தில் இருக்கிறார்.

Rajinikanth:தமன்னாலாம் ஒன்னுமே இல்ல: காவாலாவுக்கு ரஜினி போட்ட ஆட்டத்தை பாருங்க, தலைவர் மாஸ்

தமன்னாவை இந்திய ஷகீரா என அழைக்கிறார்கள் ரசிகர்கள். காவாலா பாடலுக்கு தமன்னா ஆட ரஜினி தன் ஸ்டைலை மட்டும் காட்டியிருந்தார். இந்நிலையில் தான் காவாலா பாடலுக்கு ரஜினி சூப்பராக டான்ஸ் ஆடியதை பாருங்கள் என ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

முத்து படத்தில் வந்த பாடலுக்கு ரஜினி போட்ட ஸ்டெப்ஸ் எல்லாம் காவாலாவுக்கு சூப்பராக பொருந்தியிருக்கிறது. மாலத்தீவுகளில் இருக்கும் ரஜினியே அந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் பாராட்டுவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.