இனி தக்காளிக்கு பதிலாக ஆப்பிளை பயன்படுத்தலாம்.. எடப்பாடி பழனிசாமி புது ஐடியா

சென்னை:
இனி தக்காளிக்கு பதிலாக ஆப்பிளை பயன்படுத்தலாம் என அதிமுக பொதுச்செயலாளர்

கூறியுள்ளார்.

“போடா தக்காளி” என சொல்லும் அளவுக்கு சர்வசாதாரணமாக விலை மலிவாக கிடைக்கக்கூடிய காய்கறியான தக்காளி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மக்களை பயமுறுத்தி வருகிறது. கிலோ ரூ.150, ரூ.180 என விற்பனைாகி வந்த தக்காளி இப்போது ரூ.105-க்கு விற்கப்பட்டு வருகிறது. எனினும், சாமானிய மற்றும் நடுத்தர மக்களால் தக்காளியை வாங்குவதே பகல் கனவாக மாறிவிட்டது. சமையலின் அடிப்படையே தக்காளி என்பதால் இதன் விலையேற்றம் பொதுமக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. மேலும், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், தக்காளி விலையேற்றம் குறித்து பல அரசியல் தலைவர்களும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். “தக்காளி சாப்பிடுவதை மக்கள் 4 நாட்களுக்கு நிறுத்திவிட்டால் அதன் விலை குறைந்துவிடும்” என பாஜகவின் எச். ராஜா கூறியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அப்படியென்றால் அரிசி விலை ஏறிவிட்டால், சோறு சாப்பிடுவதை நிறுத்திவிடலாமா என நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்தனர்.

இந்நிலையில், தக்காளி விலை குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைக்கு தக்காளி ஒரு கிலோ ரூ.105-க்கு விற்பனையாவதாக கேள்விப்பட்டேன். கணக்கு செய்து பார்த்தால் ஒரு தக்காளியே 14 ரூபாய் ஆகிறது. இனி தக்காளிக்கு பதிலாக ஆப்பிளே வாங்கி பயன்படுத்திவிடலாம். அந்த அளவுக்கு தக்காளி விலை உயர்ந்துவிட்டது. காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மக்களின் வருமானம் அப்படியே தான் இருக்கிறது. இதுதான் திமுக அரசின் லட்சணம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.