தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. வயது மூப்பு என்ற சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசின் முடிவால் தகுதி தேர்வு அமலானது. இதையடுத்து மூன்று முறை ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது. அதன்பிறகு தேர்வுகள் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2017, 2019, 2022 என மூன்று முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.
பொது தேர்வு – தேர்தலுக்கு நிகரானது…! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
போட்டி தேர்வு அவசியம்
இதற்கிடையில் தகுதி தேர்வு மட்டும் போதாது. நியமனத் தேர்வு என்று சொல்லப்படும் போட்டித் தேர்வும் அவசியம் என்று அரசாணை எண்: 149 பள்ளிக் கல்வி துறை நாள்: 20.07.2018ன் படி கொண்டு வரப்பட்டது. இதனால் ஆசிரியர் பணிக்கான கனவில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் இரண்டு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலானது.
சட்டத்திருத்தம் வேண்டும்
ஒருபுறம் தகுதி தேர்வு மட்டும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் தேர்ச்சி பெற்று காத்திருப்போருக்கு போட்டித் தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் நிலவுகிறது. மறுபுறம் ஆசிரியர் தகுதி தேர்வு மட்டும் போதும். மேற்கொண்டு ஒரு தேர்வு வேண்டாம். உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்ச்சி பெற்ற பலரும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர் பணியிடம் மாற்றம் செய்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு பாதிக்கப்படும் – பொது தேர்வு என்பது தேர்தலுக்கு நிகரானது – தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன்,திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 லட்சமும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் 4,லட்சத்து 22, ஆயிரத்து 100 உட்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 100ரூபாய் மதிப்பில் 56 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :-மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு நடத்தி முடிக்கப்படும். அது எந்த தேதிக்குள் வேணுமானாலும் அவர்கள் வசதிக்கு ஏற்ப முடித்துக் கொள்ளலாம். திட்டமிட்டபடி மார்ச் 13ஆம் தேதி பள்ளி பொது தேர்வு நடைபெறும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என கமிஷனிடம் தெரிவித்து நிறுத்தப்பட்டுள்ளது அப்படி பணியிடம் மாற்றம் செய்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வு பாதிக்கப்படும். பொது தேர்வு என்பது தேர்தலுக்கு நிகரானது . இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பணிக்கு செல்வதாகவும் தனக்கு 4 பூத் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 3 ஆயிரத்து 271 வாக்காளர்கள் உள்ளார்கள் என கூறினார்.
தேர்தல் வாக்குறுதி
இதுதொடர்பாக 2021 சட்டமன்ற தேர்தலை ஒட்டி 2013 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி 2 ஆண்டுகளை கடந்து விட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு
இந்த சூழலில் தான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த பிரபுதேவன் பழனிவேல் என்பவர் கடந்த 17ஆம் தேதி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு ஒன்றை அளித்தார். அதில், ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு ஜூலை 20 என தேதியிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் அளித்துள்ளது.
தமிழக அரசு திட்டவட்டம்
அதில், இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளில் ஒன்று. தற்போது போட்டி தேர்வின் மூலம் தெரிவுப்பணி மேற்கொள்ளப்படும். இந்த தெரிவு குறித்த அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் போது பார்வையிட்டு தகுதியிருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனுதாரரின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் போட்டி தேர்வு என இரண்டு தேர்வுகளை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பது தெரியவருகிறது.