சென்னை: நடிகை நயன்தாரா தனது குழந்தையை கொஞ்சும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்: அழகான க்யூட்டான காதலர்களாக வலம் வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி கடந்த ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய்சேதுபதி,ஏஆர்,ரஹ்மான் என பலர் கொண்டு வாழ்த்தினர். இவர்களின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வீடியோ தற்போது வரை வெளியாகவில்லை.
இரட்டைக்குழந்தை: இதைத் தொடர்ந்து திருமணமான சில மாதங்களிலேயே வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார் நயன்தாரா. தனது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயர் வைத்து இருப்பதாக அறிவித்தார். இதில் ‘N’ என்பது நயன்தாராவையும், ‘சிவன்’ விக்னேஷ் சிவனையும் குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கொஞ்சும் நயன்: இந்நிலையில் நயன்தாரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு உயிர்ஸ் சண்டே ஸ்பெஷல் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் குழந்தையின் முகத்தைக் காட்டுங்க என்று தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.

ஜவான்: நடிகை நயன்தாரா தற்போது நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இதில் தீபிகா படுகோன், சஞ்சய் தத் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ளது.