மணிப்பூரில் மக்களிடையே அமைதி ஏற்படுத்த அம்மாநில முதல்வர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அமைதிக்காக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்.எல்.ஏ. வுங்ஜாகின் வால்டேவின் மகன் ஜோசப் வால்டே கூறியுள்ளார். இதுகுறித்து ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் “பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டில் மக்கள் படும் துயரங்களை போக்க கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார். மணிப்பூர் மாநில தாளொன் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும் […]