Anushka – அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாததற்கு அந்த நடிகர்தான் காரணமா?.. பரபரக்கும் தகவல்

சென்னை: Anushka (அனுஷ்கா) அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாததற்கு பிரபாஸ்தான் காரணம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியான சூப்பர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர். முதல் படத்தில் அவரது நடிப்பையும், அழகையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் அவருக்கு நல்லபடியான ரெஸ்பான்ஸ் கொடுத்து வரவேற்றது. இதனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தன. தமிழில் இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனாலும் அவரது கரியரில் ஒரு திருப்புமுனை ஏற்படாமலேயே இருந்தது.

அருந்ததி: இப்படிப்பட்ட சூழலில் வெளியானது அருந்ததி. பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

தமிழில் முன்னணி: அருந்ததிக்கு பிறகு தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மேலும் பட வாய்ப்புகள் அமைந்தன. அதன்படி தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித்துடன் என்னை அறிந்தால், விக்ரமுடன் தெய்வ திருமகள், தாண்டவம், ரஜினியுடன் லிங்கா, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சிம்புவுடன் வானம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி தமிழின் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

Prabhas is the reason for Anushka not getting married

மெர்சல் செய்த பாகுபலி: இதனையடுத்து அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக அனுஷ்காவுக்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பு இல்லையென்றாலும் இரண்டாவது பாகத்தில் அனுஷ்காவுக்கு பெரும் ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவர் நடிப்பில் அசத்தினார். படமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டானதால் அனுஷ்காவும் மிக பிரபலமானார்.

குறைந்த பட வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

திருமணம் எப்போது?: இதற்கிடையே அனுஷ்காவுக்கு 41 வயது ஆகியும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதற்கு காரணமாக இப்போது ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் நடித்தபோது அனுஷ்காவும், பிரபாஸும் காதலித்ததாகவும்; இருவரும் லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Prabhas is the reason for Anushka not getting married

ஆனால் திருமணத்துக்கு பிரபாஸ் வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைக்காததால் அனுஷ்காவுடனான காதலில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறிவிட்டார் எனவும்; அதனால்தான் இன்னமும் அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்று டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

அனுஷ்காவின் செகண்ட் இன்னிங்ஸ்: அனுஷ்கா திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சமையல் கலைஞராக நடித்திருக்கிறார் அனுஷ்கா. ராதா இசையமைப்பில், மகேஷ் பாபு என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.