மும்பை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.
ஷருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு ஷேர் செய்துள்ளது.
இந்த போஸ்டரை வைத்து ஜவான் படத்தின் கதை என்னவாக இருக்கும் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.
ஜவான் கதையாடா இப்ப முக்கியம்: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்றுவிட்டார். தமிழில் தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி வைத்து வந்த அட்லீக்கு, பாலிவுட்டில் வாய்ப்புக் கொடுத்துள்ளார் ஷாருக்கான். இதனால் அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைக்கிறார். கடந்த வாரம் வெளியான ஜவான் ப்ரீவியூ க்ளிம்ப்ஸ் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்தப் படத்தின் கதை குறித்தும் பலவிதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. பொதுவாகவே எதாவது பழைய தமிழ்ப் படங்களை காப்பி பேஸ்ட் செய்வதே அட்லீயின் வழக்கம்.
இதுவரை அவர் இயக்கியுள்ள அனைத்து படங்களுமே கதை திருட்டு சர்ச்சை அல்லது காப்பி பேஸ்ட் பிரச்சினையில் சிக்கியுள்ளது. அதேபோல், ஜவான் கதையும் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தின் கதை எனத் தெரிகிறது. இந்நிலையில், ஜவானில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று விஜய் சேதுபதியின் கண்ணை மட்டும் ஃபோக்கஸ் செய்து போஸ்டராக வெளியானது.
#Jawaan releasing on Sep 7th.
Check the first comment before watching this video.#Atlee #SRK pic.twitter.com/PnmJip0NE4— Blue Sattai Maran (@tamiltalkies) July 24, 2023
அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் ஸ்டைலான லுக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் விஜய் சேதுபதியின் போஸ்டரை வைத்து இயக்குநர் அட்லீயை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். கவுண்டமணி, செந்திலின் பழைய காமெடியான அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் இயக்குநரிடம் “கதை நல்ல கதையா” என கவுண்டமணி நக்கலடிக்க, அதற்கு “இதெல்லாம் உனக்கு அவசியமா என இயக்குநர் (அட்லீ) கடுப்பாகிறார்.
ஜவான் கதை குறித்து விஜய் சேதுபதி கேட்டிருந்தால், அதற்கு அட்லீயின் பதில் எப்படி இருக்கும் என்பதே இந்த காமெடியின் நோக்கம். இதனை புரிந்துகொண்ட நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனுடன் இணைந்து அட்லீயை கலாய்த்து வருகின்றனர். அதேநேரம் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் அட்லீயின் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.