Nayanthara:என் தங்கமேனு மகன் உயிரை கொஞ்சி விளையாடிய நயன்தாரா: க்யூட் புகைப்படம் இதோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர், உலக் என இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பி கூடுதல் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் நயன்தாரா.

“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
தங்களின் செல்ல மகன்களின் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் விக்னேஷ் சிவன்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நயன்தாரா தன் செல்ல மகன் உயிருடன் கொஞ்சி விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் கழுத்தில் இருக்கும் செயினுடன் உயிர் விளையாடிய அந்த புகைப்படத்திற்கு லட்சக் கணக்கில் லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது.

View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial)
அந்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு, என் உயிர்ஸ் என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து முதல் ஆளாக கமெண்ட் போட்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன் தான்.

எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வீட்டிற்கு வந்து நயன்தாரா, பிள்ளைகளின் முகத்தை பார்த்தால் அனைத்தும் மறந்துவிடுகிறது என்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த மகன்களின் முகத்தை காட்டாமலேயே இருக்கிறீர்களே. கொஞ்சம் முகம் தெரியும்படி புகைப்படம் வெளியிடுங்கள் அன்பான இயக்குநரே என்கிறார்கள் ரசிகர்கள்.

கெரியரை பொறுத்தவரை பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். முன்னதாக அவர் அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை இயக்குவதாக இருந்தது. படப்பிடிப்பு துவங்க வேண்டிய நேரத்தில் இயக்குநரை மாற்றிவிட்டார்கள்.

தன்னை படத்தில் இருந்து நீக்கிய போதிலும் அஜித் மீதான பாசம் குறையாமல் இருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் விடாமுயற்சி படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

நயன்தாராவோ அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வெளியான ஜவான் பட ட்ரெய்லர் பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஷாருக்கானை ஸ்டைலாகவே பார்த்துப் பழகிய பாலிவுட் ரசிகர்கள், ஜவான் ட்ரெய்லரில் அவர் மொட்டைத்தலையுடன் வந்ததை பார்த்து மிரண்டுவிட்டார்கள். இந்த தமிழ் இயக்குநர் ஏதோ வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார் என்று ஜவான் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. மேலும் அந்த படம் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட் சென்றிருக்கிறார்.

Nayanthara: ஜவானுக்காக நயன்தாராவுக்கும், அனிருத்துக்கும் ஒரே சம்பளம்?

ஜவான் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் வெளியான நயன்தாராவின் போஸ்டரை பார்த்த விக்னேஷ் சிவன் தன் மனைவியை பாராட்டினார். முன்னதாக ட்ரெய்லரை பார்த்து அவர் பாராட்ட, அதை பார்த்த ஷாருக்கானோ, நயன்தாராவிடம் எச்சரிக்கையாக இருங்கள் கணவரே. அவர் புதிதாக சில கிக்ஸுகள், பன்ச்சுகள் கற்றுக் கொண்டிருக்கிறார் என விக்னேஷ் சிவனை எச்சரித்தார்.

Nayanthara: நயன்தாராவிடம் உஷாரா இருங்க: விக்னேஷ் சிவனை எச்சரித்த ஷாருக்கான்

மனைவியின் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடுபவர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கணவர் விக்னேஷ் சிவனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் நயன்தாரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.