வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக, ‘பேஸ்மேக்கர்’ கருவி வெற்றிகரமாக நேற்று பொருத்தப்பட்டது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 73, அவரது வீட்டில் கடந்த வாரம் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவருக்கு இதயத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை என, டாக்டர்கள் கண்டறிந்தனர். ஆனாலும் அவரது வயதை கருத்தில் வைத்து, அவரது இதயத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும் கருவியை, அவரது உடலில் பொருத்தி கடந்த ஒரு வாரமாக டாக்டர்கள் கண்காணித்தனர்.
இந்நிலையில், நெதன்யாகுவுக்கு, ‘பேஸ்மேக்கர்’ பொருத்துவது அவசியம் என்பது கண்காணிப்பு கருவி வாயிலாக தெரியவந்தது. எனவே, அவரது இதயத்தில் பேஸ்பேக்கர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நேற்று செய்து முடிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை முடியும் வரையில், துணை பிரதமர் யார்வின் லெவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் பிரதமர் நெதன்யாகு நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் பார்லிமென்டில் நீதித்துறை சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரு தினங்களில் அந்நாட்டு பார்லியில் மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement