சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
ஆக்ஷன் ஜானரில் பிரீயட் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் டீசர் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே தேதியான ஜூலை 28ல் கேப்டன் மில்லர் டீசரும் வெளியாகவுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியுடன் மோதும் தனுஷ்: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தற்போது ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். சினிமாவில் முன்னணி ஹீரோவாக வரும் முன்பே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் சினிமா கேரியரில் உச்சம் தொட்ட தனுஷ், இப்போது ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டார்.
இன்னொரு பக்கம் தனது மகன்களை மட்டும் அடிக்கடி பார்த்து வருகிறார் தனுஷ். முக்கியமாக விவாகரத்துக்குப் பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை சீண்டிப் பார்க்கும் விதமாக தனது கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
பீரியட் ஜானரில் ஹை வால்டேஜ் ஆக்ஷன் படமாக உருவாகும் கேப்டன் மில்லரில் தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக தனுஷின் கேப்டன் மில்லர், ரஜினியின் ஜெயிலர் என இரண்டு படங்களிலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தான் வில்லனாக நடித்துள்ளாராம். கடந்த மாதம் இறுதியில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த ரிலீஸ் தேதி தான் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா, வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதே 28ம் தேதியில் தான் தனுஷின் கேப்டன் மில்லர் பட டீசரும் வெளியாகிறதாம்.
ஒருபக்கம் ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்துகொண்டிருக்கும் போது, அதனை டம்மியாக்கவே கேப்டன் மில்லர் டீசரை அதே தேதியில் தனுஷ் ரிலீஸ் செய்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக உதயநிதியின் மாமன்னன் ட்ரெய்லர் வெளியான அதே தேதியில், விஜய்யின் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டும் வெளியானது. அதனால் மாமன்னன் ட்ரெய்லர் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா 28ம் தேதி நடைபெறுவதை தெரிந்துகொண்டே, அதேநாளில் கேப்டன் மில்லர் டீசரையும் வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் ஒரே நாளில் முன்னாள் மாமனாரும் மருமகனும் தங்களது பட நிகழ்ச்சிகள் மூலம் மோதிக்கொள்ளவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.