சென்னை: சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடினர்.
ஆந்திர மாநிலம் நரசராவ்பேட்டையிலும் சூர்யாவின் ரசிகர்கள் சார்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
அப்போது சூர்யாவுக்கு பேனர் வைத்த 2 கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூர்யாவுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி: நடிகர் சூர்யா நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவரது கங்குவா படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. மேலும், சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இன்னொரு பக்கம் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.
ஆந்திர மாநிலம் நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள் சார்பில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பேனர் கட்ட முடிவு செய்தனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் இருவர் பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கியுள்ளது.
இந்த விபத்தில் வெங்கடேஷ், சாய் என்ற இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார். அதில், கடந்த ஜூன் மாதம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சூர்யாவின் ரசிகர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதற்கு சூர்யா இரங்கல் தெரிவித்த டிவிட்டர் பதிவை ஷேர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Waiting for the condolence tweet for your fans from Andhra who lost their lives yesterday while putting up your birthday banner. https://t.co/LO158ksBwJ
— Blue Sattai Maran (@tamiltalkies) July 24, 2023
மேலும், இதேபோல் ஆந்திராவில் உங்கள் பிறந்தநாளுக்காக பேனர் கட்டியபோது உயிரிழந்த ரசிகர்களின் மறைவுக்கு எப்போது இரங்கல் தெரிவிக்கப் போகிறீர்கள் என சூர்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் அதே டிவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளனர். அதாவது நேற்று பலியான ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் சூர்யா.
அதனை வீடியோவாக எடுத்துள்ள சூர்யா ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலாக அவரது பதிவின் கீழே ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் எதிர்பார்த்தது சூர்யாவின் இரங்கல் என்பதை அவரது ரசிகர்கள் புரிந்துகொள்ளவில்லை எனத் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு சூர்யா ரசிகர்களிடத்தில் வைரலாகி வருகிறது.