சென்னை: சினிமா பின்னணியும் எதுவுமே இல்லாமல் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தனது திறமையால் மட்டும் சினிமாவில் ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி சம்பாதித்த சொத்து குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தார் விஜய் ஆண்டனி.
இவரின் வித்தியாசமான இசை ஆடாத கால்களையும் ஆட்டம் போடவைக்கும் என்பதற்கு பல பாடல்கள் காட்சியாக உள்ளன. முதல் படத்திலே நல்ல பெயர் கிடைத்தால் அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்தார்.
அட்ரா அட்ரா நாக்குமுக்க: தொடர்ந்து டிஷ்யூம், நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.குறிப்பாக காதலில்’ விழுந்தேன் விழுந்தேன் படத்தில் ‘உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியாது அன்பே’ பாடல் மெலோடியின் உச்சம் என்றால், ‘அட்ரா அட்ரா நாக்குமுக்க’ பாடல் இறங்கி ஆட்டம் போட வைத்தது. இன்னும் சொல்லப்போனால் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியை பலரும் மறந்து ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி என பாட்டுப்பாடி வருகின்றனர்.
ஹீரோவாக: இப்படி தனது புதுமையான இசையால் ரசிகர்களை வசியம் செய்த விஜய் ஆண்டனி, ‘நான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகரானார். முதல் படத்திலேயே ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்த திகிளை கிளப்பினார். அந்தப்படத்தைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன்,சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 என அடுத்தடுத்து ஹிட்படங்களை கொடுத்து வருகிறார்.

தன்னம்பிக்கை நாயகன்: இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல பரிமாணங்களை எடுத்து தனது திறமையை நிரூபித்து வரும் விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த நாளில் தனது திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்த தன்னம்பிக்கை நாயகனாக விஜய் ஆண்டனி இருக்கிறார்.
சொத்து மதிப்பு: விஜய் ஆண்டனிக்கு சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களாவும், பெங்களுரில் 3 கோடியில் ஒரு வீடும், அதே போல பிஎம்டபியூ போன்ற விலை உயர்ந்த நான்கு சொகுசு காரை வைத்து இருக்கும் விஜய் ஆண்டனியின் மொத்த சொத்தின் மதிப்பு 55 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.