சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு இப்படியொரு வெறித்தனமான பரிசு வரும் என ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என கேப்டன் மில்லர் டீசரை பார்த்து பாராட்டி சோஷியல் மீடியாவையே நள்ளிரவில் அதகளம் செய்து வருகின்றனர்.
#CaptainMilIer ஹாஷ்டேக்கை போட்டு தனுஷ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கேப்டன் மில்லர் டீசரை பாராட்டியபடியே நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.
சர்வதேச தரத்தில் படத்தின் காட்சிகள் இருக்கு என்றும் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்கு கிளாஷ் விட யாருக்காவது தில் இருக்கா என்றும் தனுஷ் ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.
சர்வதேச தரம்னா இதுதான்: கேப்டன் மில்லர் டீசரை பார்த்த ரசிகர்கள் மரியான் படத்துக்கு பிறகு மிகவும் வித்தியாசமாக நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார் என்றும் போர்க் காட்சிகளை தத்ரூபமாக கொடுத்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மிரள வைத்துள்ளார் என தனுஷ் ரசிகர்கள் #CaptainMilIer ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
கேப்டன் மில்லர் படத்தின் ஒவ்வொரு டீசர் காட்சிகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு, இப்படியொரு கூஸ்பம்ஸான தனுஷ் படத்தை முதன்முறையாக பார்க்கப் போகிறோம் என சோஷியல் மீடியாவையே தெறிக்கவிட்டு வருகின்றனர்.

டிசம்பர் 15க்கு கிளாஷுக்கு தில் இருக்கா?: இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பை டீசர் ரிலீஸ் உடன் கொடுத்து தனுஷ் ரசிகர்களின் தூங்க விடாமல் கொண்டாட வைத்து விட்டனர்.
ஜெயிலர், லியோ, இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி என தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களாக வெளியாக உள்ள நிலையில், அந்த பட்டியலில் மிகவும் முக்கியமான படமாக கேப்டன் மில்லரும் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 15ம் தேதி வேறு எந்த படமாவது போட்டிக்கு ரெடியா? என தனுஷ் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாள் டார்கெட்டா: தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி கேப்டன் மில்லர் டீசர் வெளியான நிலையில், டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் படம் வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், ரஜினி பிறந்தநாளை தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Is anyone have guts to Release movies on Dec 15th ? 😄#HappyBirthdayDhanush #CaptainMilIer @dhanushkrajapic.twitter.com/HcB1V9yiTR
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) July 27, 2023