தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வார இறுதி கூடுதல் பேருந்துகள்குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் என மொத்தம் 600 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளை (ஜூலை 29) மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மொகரம் பண்டிகைமொகரம் என்பது இஸ்லாமியர்களின் காலண்டரில் முதல் மாதம். புதிய பிறை தென்படுவதன் முதல் நாளையே புதிய மாதத்தின் தொடக்கமாக கருகின்றனர். அந்த வகையில் ஜூலை 19ஆம் தேதி இஸ்லாமியர்களின் மொகரம் மாதம் தொடங்கியது. நாளைய தினம் 10ஆம் நாள் ஆகும். அன்றைய தினம் நோன்பு வைப்பது, சிறப்பு தொழுகைகள் வைப்பது, ஊர்வலங்கள் நடத்துவது உள்ளிட்டவை கடைபிடிக்கப்படும்.
அரசு விடுமுறைரம்ஜானுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமான பண்டிகையாக மொகரம் பார்க்கப்படுகிறது. மொகரம் அரசு விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சனி, ஞாயிறு மற்றும் மொகரம் பண்டிகையை ஒட்டி 4 நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.திருச்சிக்கு சிறப்பு பேருந்துகள்திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோவைக்கு சிறப்பு பேருந்துகள்கோவை மண்டல போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொகரம் மற்றும் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகப்படியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகம் திட்டம்பயணிகளின் வருகையை கவனித்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை களமிறக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் சிறப்பு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்குமாறு பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.