
வைரம் அல்ல… தெளிவுப்படுத்திய தமன்னா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர் கையில் வைரம் வடிவலான மோதிரம் போன்று அணிந்த போட்டோ ஒன்று வைரலானது. அது வைரம் என்றும், உலகின் 5வது பெரிய வைரம் என்றும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் செய்தி பரவியது. மேலும் சிரஞ்சீவி உடன் 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் தமன்னா நடித்தபோது அவரின் நடிப்பை பாராட்டி, ராம் சரண் மனைவி உபாசானா அவருக்கு இதை பரிசளித்ததாகவும் தகவல் வெளியானது.
இதை மறுத்துள்ள தமன்னா, ‛‛இது நீங்கள் நினைப்பது போன்று வைரம் அல்ல, வெறும் பாட்டில் ஓபனர் தான்'' என தெளிவுப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இதே போட்டோ சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வைரலான போது அப்போதும் இதேப்போன்று ஒரு விளக்கத்தை தமன்னா அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.