புலம்பும் அறிவாலய சீனியர்கள்… டென்ஷனில் ஸ்டாலின்! – உளவுத்துறை போட்ட 'நோட்'! – விமர்சனம்: Pizza 3

புலம்பும் அறிவாலய சீனியர்கள்… டென்ஷனில் ஸ்டாலின்!

அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருச்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்,” உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடம் கொண்டுசெல்லுங்கள். அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள்” என அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆனால், கட்சிக்குள் நிலைமை அப்படி இல்லை. கோஷ்டித் தகராறுகள், உள்ளடிப் பஞ்சாயத்துகள் ஏகத்துக்கும் களைகட்டுகின்றன. சில இடங்களில் அடிதடியாகவும் மாறி, போர்க்களமாகியிருக்கிறது.

“இவ்வளவு பிரச்னைகளையும் மடியில் வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோமோ தெரியவில்லை” எனப் புலம்புகிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

தி.மு.க-வில் எங்கேயெல்லாம் பிரச்னை… யார் மீதெல்லாம் சர்ச்சை..?

விரிவாகவே விசாரித்த தகவல்களைத் தருகிறது இன்று வெளியான ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

மணிப்பூரில் ‘I.N.D.I.A’ குழு – இனியாவது விழிக்குமா மத்திய அரசு ?!

மணிப்பூர் வன்முறை

ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை, மைதேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கிசுகிசு: உளவுத்துறை போட்ட ‘நோட்’!

கிசுகிசு

மூவேந்தர்களில் ஒருவரின் பெயர்கொண்ட இயக்குநரைச் சமீபத்தில் தோட்டத்துக்கு அழைத்துப்போனார்களாம். அவருடன் பல மணி நேரம் தன் ஆரம்பகால வாழ்க்கை தொடங்கி அரசியல் உள்ளிட்ட விஷயங்களைப் பேசினாராம் பழக் கட்சித் தலைவர். பேச்சின் முடிவில்தான் தலைவரின் சுயசரிதையைப் படமாக்க நினைக்கும் திட்டமே அந்த இயக்குநருக்குத் தெரியவந்ததாம்.

கிசுகிசு-வில் மேலும்…

* சோர்ந்துபோன பணிவானவர்!

* கண்காணிக்கப்படும் கதாநாயகன்!

* உளவுத்துறை போட்ட ‘நோட்’!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

“ஜெய் ஷாவின் அசுர வளர்ச்சி…” – அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் அமித் ஷா

ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பா.ஜ.க-வில் எந்தத் தலைவருடைய வாரிசுகளும் அரசியல் பதவிகளில் இல்லையா… பா.ஜ.க-வில் மாநில வாரியாகப் பதவியில் இருக்கும் வாரிசுகளின் பட்டியலை நான் வெளியிடவா…?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அவரது பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

—————

“ஜெய் ஷாவின் அசுர வளர்ச்சி…” – அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஜெயிலர்’ Audio Launch: ரஜினி சொன்ன குட்டி கதை! 

ரஜினி |Jailer

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் ஆகியோரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு அரங்கத்தில் நடைபெற்றது.

விழா மேடையில் ரஜினி கூறிய காக்கா – கழுகு கதை தான் தற்போதைய வைரல் டாக்.

அதை படிக்க இங்கே க்ளிக் செய்க…

———-

ரஜினி, நெல்சன், கலாநிதி மாறன், யோகி பாபு, விக்னேஷ் சிவன், அனிருத் பேச்சு முழு தொகுப்பு…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘The Hunt for Veerappan’ டீசர்- கொதிக்கும் வீரப்பன் மகள் வித்யா! 

வீரப்பன் மகள் வித்யாராணி

வீரப்பன் தேடுதல் வேட்டையை மையப்படுத்தி லேட்டஸ்ட்டாக ரிலீஸாகியிருக்கும் ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ ஆவணப்பட டீசர் மீண்டும் வீரப்பன் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கிறது.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் இந்த ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்புகளும் சர்ச்சைகளும் இப்போதே ஆரம்பித்துவிட, பாஜக வின் ஓபிசி பிரிவின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் வீரப்பனின் மகள் வித்யாராணி, டீசர் குறித்தும், அவரது தந்தை மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவை குறித்தும் தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.

வித்யாராணியின் விரிவான பேட்டியை படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘குழந்தை இல்லனு அடிக்கிறான், சாகப்போறேன்மா!’ – பதைபதைக்க வைக்கும் வீடியோ!

தற்கொலை செய்து கொண்ட பெண்

புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள ரோஜா நகர் கே.மணவெளியைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் – மோனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

பணக் கவலை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

பண மேலாண்மை

ணம் நிறைய இருப்பதோ, குறைவாக இருப்பதோ பிரச்னை இல்லை; ஆனால், இருக்கும் பணத்துக்குள் செலவுகளை நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செய்யும் சூட்சுமங்கள் தெரியாமல் இருப்பதுதான் பிரச்னையே.

எந்த அளவுக்கு அதிகமாக வருமானம் வந்தாலும், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட்டு செலவு களை நிர்வகித்து வந்தால் எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்..?

இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள இது குறித்த சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘நார்மல்’ – ஆனாலும் தொடரும் உடல்வலியும் சோர்வும்… தீர்வு என்ன?

உடல்வலி

“எப்போதும் தீராத உடல்வலி இருக்கிறது. எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்து விட்டோம். எதிலும் குறையில்லை, ஆனாலும் உடல்வலியும், சோர்வும் தொடர என்ன காரணம்?”

– வாசகரின் இந்த கேள்விக்குப் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

படிக்க இங்கே க்ளிக் செய்க…

சினிமா விமர்சனம்: Pizza 3

Pizza 3

நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது. அது ஏன் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? என்பதைத் திகிலாக சொல்ல முற்பட்டு இருப்பதே ‘பீட்ஸா 3 – தி மம்மி’ படத்தின் கதை.

திகில் காட்சிகளில் பதட்டம், குழப்பான மனநிலை, கையறுநிலையில் கோபப்படுவது என மொத்த படத்தின் பாரத்தையும் ஒருவராக சுமந்துள்ளார் நாயகன் அஸ்வின். அதுவே படத்தின் இறுதிக் காட்சிகளில் அந்த பாரம் தாங்காமல் சுமையைக் கீழே இறக்கவும் வைத்துள்ளது.

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.