சென்னை: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் குட்டி கதையை சொல்லி ரஜினி, விஜய்யை சீண்டி விட்டார் என்று செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதில் தமன்னா, ரம்யா பாண்டியன், சிவராஜ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே சூப்பர் பட்டம் குறித்து விஜய் ரசிகர் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், ஹூக்கும் பாடல் வரிகள் விஜய்யை நேராக தாக்குவது போல இருந்ததால் அது சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளானது.
களேபரமானது: இந்நிலையில், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து, செய்யாறு பாலு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினி மாஸாக என்ட்ரி கொடுத்து நெல்சன் மற்றும் அனிருத்தை கட்டித்தழுவினார். இதையடுத்து நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே பீஸ்ட் படத்தில் இருந்து பாட்டு ஒளிபரப்பானதும் அரங்கமே களேபரமாகி, ரசிகர்கள் கூச்சலிட்டு பாட்டை நிறுத்த சொன்னார்கள்.
தெளிவான பேச்சு: விஜய் மீது ரசிகர்கள் அவ்வளவு வெறுப்பில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ரசிகர்களுக்கு மட்டுமில்லை ரஜினிக்கும் அந்த வெறுப்பு, கோவம் இருந்தது. அதை அவர் நேரடியாக காட்டிக்கொள்ளவில்லை. தனது வயது முதிர்ச்சி, அனுபவம், பக்குவத்தை வைத்து சொல்லவந்ததை அழகாக சொல்லிவிட்டார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: அனைவரும் ரஜினியின் பேச்சை கேட்க ஆவலாக அமர்ந்து இருந்தனர். எனக்கு 80 கால கட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. அப்போது அந்த பட்டத்தை நான் வேண்டாம் என்று சொன்னேன். ஏன் என்றால், அப்போ, கமல் ரொம்ப பெரிய நடிகராக இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனால், ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நான் யாருக்கும் எப்போதும் பயப்படவே மாட்டேன் என்றார்.

காக்கா கழுகு கதை: அதே போல தனக்கு இருந்த கோவத்தை காக்கா,கழுகு கதையை கூறிவிட்டு நாளை சோஷியல் மீடியாவில் காக்கா யாரு, கழுகு யாருனு கேட்பீங்க நான் கதையைத் தான் சொன்னேன் என்று சொன்னாலும், ரஜினி தன்னுடைய கோவத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டார். என்னை தொட வேண்டும் என்றால் என் உயரத்திற்கு வந்து பாரு என்று தான் அதற்கு அர்த்தம்.
விஜய்யை சீண்டி விட்டார்: காக்கா,கழுகு கதையை கூறி ரஜினிகாந்த் விஜய்யை சீண்டி விட்டார். இதற்கு சரியான பதிலடியை லியோ ஆடியோ லான்சில் விஜய் கண்டிப்பாக கொடுப்பார். விஜய் ரஜினியை மானசீக குருவாக நினைத்து பல படங்களில் நடித்து இருக்கிறார் என்பதால், அவரை, நேரடியாக தாக்கி பேசமாட்டார். ஆனால், கண்டிப்பாக ஒரு கவுண்டர் இருக்கு என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.