`ஊழல்வாதிகள் என்று சொன்னவர்களுக்கு அமைச்சர் பதவி; பிரதமர் மோடிக்கு நன்றி!' – சரத் பவார் கருத்து
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், இன்று கட்சியை உடைத்துக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பா.ஜ.க-சிவசேனா (ஷிண்டே) அமைச்சரவையில் சேர்ந்திருக்கிறார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பேட்டியளித்த அஜித் பவார், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு நன்றாக முன்னேறி வருகிறது. மற்ற நாடுகளிலும் மோடி பிரபலமாக இருக்கிறார். அவரையும், அவரது தலைமையையும் அனைவரும் ஆதரிக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தல் … Read more