மதுரை மக்களே ரெடியாகுங்க.. கலைஞர் நூற்றாண்டு நூலக "குட்நியூஸ்".. இவ்வளவு சீக்கிரமாவா..

மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நூலகத்தில் இருக்கும் வசதிகளை பார்க்கும் போது, இது உண்மையிலேயே மதுரை மக்களுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. மதுரை மக்களுக்கு இது பொற்காலம் போல இருக்கிறது. சமீபகாலமாக அரசாங்கத்திடம் இருந்து அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் தூங்கா நகரத்தையே திக்குமுக்காட வைக்கின்றன. மதுரையில் மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட வேலைகள் … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் தொடரும் பதக்க வேட்டை! டயமண்ட் லீக் சாம்பியன் கோல்டன் பாய்

மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் லொசேன் லெக் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில், 87.66 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெற்றி பெற்று பட்டம் வென்றார். லாசானேயில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டிகலில், இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா! காயம் காரணமாக ஒரு மாத ஓய்வில் இருந்தாலும், திரும்பி வந்த உடனே நீரஜ் சோப்ரா பட்டம் வென்று சாதனை படைத்தார் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ராவின்அபாரமான ஆட்டம் தொடர்கிறது. ஒரு மாத … Read more

ஆதிபுருஷ் விமர்சனத்தால் அலர்ட் ஆன 'ஹனு மேன்' டீம்

முன்பெல்லாம் புராணக் கதைகளை சினிமாவாக எடுத்தால் ரசித்துப் பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இன்று கதையை மாற்றி விட்டார்கள், கதாபாத்திரத்தை சிதைத்து விட்டார்கள், புராண கடவுள்களின் தோற்றத்தையே மாற்றி விட்டார்கள் என ஒவ்வொரு திசையில் இருந்தும் பலமான குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படமும் இந்த விமர்சனத்திற்கு தப்பவில்லை. குறிப்பாக ராமன், அனுமன், ராவணன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திர தோற்றங்கள் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்ததற்கு மாறாக இருப்பதாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. படத்தின் வசனங்களும் … Read more

Ilaiyaraaja: இளையராஜா இல்லைன்னா படமே வேண்டாம்… ஒற்றைக் காலில் நின்ற பிரபல இயக்குநர்!

சென்னை: முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான விடுதலை படத்தில் இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இளையராஜா இசையமைத்தால் மட்டுமே படம் இயக்குவேன் என ஒற்றைக் காலில் நின்றுள்ளார் பிரபல இயக்குநர் ஒருவர். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபஹத் பாசிலின் தந்தையான இயக்குநர் பாசில் தான் அவர் என தெரியவந்துள்ளது. இளையராஜா இல்லைன்னா படமே வேண்டாம்: தற்போது பான் இந்தியா ஸ்டாராக … Read more

Hero Motocorp : ஹீரோ மோட்டோகார்ப் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விலை உயருகின்றது

வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து 1.5 சதவிதம் வரை உயர்த்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, பேஷன் பிளஸ் போன்ற மாடல்களை தவிர மற்ற மாடல்களின் விலை அதிகரிக்கப்படலாம். மாடல்களின் விலைப் பட்டியல் ஜூலை 3-ல் வெளியாகும். Hero Motocorp Price Hike விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப், … Read more

தமிழகத்தில் 3 நாள் மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் சில இடங்களிலும், வரும் 3, 4-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூலை 2) நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, … Read more

திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் இன்று முதல் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் அபிதேயக அபிஷேகம் என்றழைக்கப்படும் ஜேஷ்டாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜூலை மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று சதுர்வேத ஹோம பூஜைகள் ஆகம சாஸ்திரப்படி தொடங்கியது. இதில் 32 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த சதுர்வேத ஹோம பூஜைகளில் தேவஸ்தான அதிகாரிகள் உட்படபலர் … Read more

காவல்துறையினருக்கு நன்றி சொன்ன சைலேந்திரபாபு: அப்புறம் கொஞ்சம் அட்வைஸ்!

தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்த சைலேந்திர பாபு இன்று ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். பணி ஓய்வுபெற்ற நிலையில் சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அன்பான காவல் அதிகாரிகளே, காவலர்களே, 30.06.2021 அன்று தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். இன்று பணி நிறைவு பெற்று உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இரண்டாண்டு காலம் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற … Read more