ராய்ச்சூர், : உத்தர பிரதேசத்தில் இருந்து வாங்கி வந்து, கஞ்சா சாக்லேட் விற்ற இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராய்ச்சூரின் எல்.பி.எஸ்., நகரில் ஒரு வீட்டில், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக, சக்திநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில், நேற்று காலை போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் இருந்த சாக்கு பையை பிரித்து பார்த்த போது, கஞ்சா சாக்லேட்கள் இருந்தன. வீட்டில் இருந்த ராஜய்யசாமி, 54, அமரய்யாசாமி, 25 கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் உத்தர பிரதேசத்தில் இருந்து, கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்கள், கட்டட தொழிலாளர்களுக்கு, ஒரு சாக்லேட்டை 60 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.
2.66 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 30,000 ரூபாய்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement