வாகன உரிமம் மாற்றத்திற்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்: அரசுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீஸ்

திருவனந்தபுரம்,

கேரள ஐகோர்ட்டில் குடும்ப தகராறு காரணமாக, கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது ஒப்புதல் இன்றி, எனது பேரில் உள்ள வாகனத்தை எனது கணவர் அவரது பெயருக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார். மேலும் 1989-ம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகனங்களின் உரிமை மாற்றத்திற்கு படிவம் எண் 29, 30 ஆகியவற்றில் எனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது மனுவில், வாகன பதிவு இணையதளத்தில் வானங்களின் உரிமம் மாற்றத்தை உண்மையான உரிமையாளர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு எளிதாக மாற்றும் வசதி உள்ளது. எனவே வாகனங்களின் உரிமம் மாற்றத்திற்கு ஆதாரை கட்டாயப்படுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளை எளிதாக தீர்க்க முடியும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி முரளி புருஷோத்தமன் மத்திய, மாநில போக்குவரத்து கமிஷனர், மண்டல போக்குவரத்து அதிகாரி ஆகியோரின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் மனு அளித்த பெண்ணின் கணவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.