சென்னை: நடிகர் சிம்பு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR48 படத்தில் இணையவுள்ளார் சிம்பு. {image-simbu1-1691241897.jpg
