சித்தார்த் நகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிலர் இரு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்ஹ்டு துன்புறுத்தி உள்ளனர். சித்தார்த் நகர் மாவட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு திருட்டு சந்தேகத்தின் பேரில் 2 சிறுவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு சித்ரவதைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இத்தகைய கொடூரமான செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. […]
