பாத்ரூம் செல்லும் மாணவிகள் தான் "டார்கெட்".. பள்ளியில் கொடூரம்.. ஆசிரியரை பதம் பார்த்த பெற்றோர்கள்!

ஹைதராபாத்:
பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஆசிரியரை மாணவிகளின் பெற்றோர் துரத்தி துரத்தி அடித்து துவைத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. காமக்கொடூரனாக வலம் வந்த ஆசிரியர், மாணவிகளுக்கு செய்த கொடுமையை கேட்கும் போது நமக்கே நெஞ்சம் பதறுகிறது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள அட்டாப்பூர் பகுதியில் எஸ்ஆர்டிஜி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் விஷ்ணு (32) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் அங்குள்ள மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்திருக்கிறார். குறிப்பாக, பாத்ரூம் செல்லும் மாணவிகளை விஷ்ணு பின்தொடர்ந்து செல்வாராம். பின்னர் அந்த மாணவிகளை அவர்களுக்கு தெரியாமல் மேற்புறம் இருந்து வீடியோ எடுத்து விடுவாராம். பின்னர் பாத்ரூமை விட்டு வெளியே வரும் அந்த மாணவிகளிடம் வீடியோவை காட்டுவாராம்.

“உன் நிர்வாண வீடியோ என்னிடம் இருக்கிறது. எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இதை இண்டர்நெட்டில் போட்டு விடுவேன்” என மிரட்டுவாராம். இதற்கு பயந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஆசிரியர் விஷ்ணு.

விஷ்ணுவுக்கு பயந்து பல மாணவிகள், தங்களுக்கு நேர்ந்து வரும் கொடுமையை பெற்றோர்களிடமோ, மற்ற ஆசிரியர்களிடமோ கூற பயந்துள்ளனர். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் விஷ்ணு, பல மாணவிகளை தனது காம இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் ப்ளஸ் 2 பயிலும் ஒரு மாணவியை இதபோல வீடியோ எடுத்து தனது பாணியில் மிரட்டி அத்துமீற முயற்சித்துள்ளார். ஆனால், அவரிடம் இருந்து தப்பி ஓடிய மாணவி, வீட்டுக்கு வந்து நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து, இன்று காலை அந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் மட்டுமல்லாமல் மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் நேராக பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் விஷ்ணுவை தரதரவென வெளியே இழுத்து வந்தனர். பின்னர் ஆசிரியர் விஷ்ணுவை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். கற்களை எரிந்தும், உருட்டுக் கட்டையால் அடித்தும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் வலி தாங்க முடியாமல் ரத்தம் சொட்ட சொட்ட, விஷ்ணு ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய மாணவிகளின் பெற்றோர் அவரை பிடித்து கீழே தள்ளி மிதிக்க தொடங்கினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், பெற்றோரகளிடம் இருந்து ஆசிரியர் விஷ்ணுவை குத்துயிரும் கொலை உயிருமாக மீட்டனர். பின்னர் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.