பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன. முக்கியமாக டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
