பிடிஆர் ஆடியோ சர்ச்சை: பல்பு வாங்கிய அண்ணாமலை! உச்ச நீதிமன்றம் வைத்த நச் குட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சர்ர்சை ஆடியோ தமிழக அமைச்சரவையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் வெளியான அந்த ஆடியோவில் சபரீசனும், உதயநிதியும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டதாக கூறப்பட்டது.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது குரலில் போலியாக ஆடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து அமைச்சர் பிடிஆரும் விளக்கம் அளித்தார். முதல்வர் ஸ்டாலினும் பாஜகவின் மலினமான அரசியல் இது என்று கூறினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக திமுக நிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழனிவேல் தியாகராஜன் வகித்த நிதியமைச்சர் பதவி தங்கம் தென்னரசுவுக்கு மாற்றப்பட்டது. மனோ தங்கராஜ் வகித்திருந்த தகவல் தொழில்நுட்பத் துறை பிடிஆருக்கு கொடுக்கப்பட்டது.

நிர்வாக வசதிக்காக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தாலும் ஆடியோ சர்ச்சை இதில் முக்கிய பங்காற்றியிருக்கும் என்று அப்போதே கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் குடும்பம் முறைகேட்டில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக பிடிஆரின் சர்ச்சை ஆடியோவை ஆதாரமாக முன்வைத்து பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சீமான் பேசியது நல்லது இல்ல கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது ஆதாரமற்ற போலி ஆடியோ. உச்ச நீதிமன்றத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று கண்டித்துள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜரான பிரனேஷ் ராஜமாணிக்கம், இந்த ஆடியோ பதிவினால் தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதியமைச்சர் பதவி மாற்றப்பட்டது. அது அவரது குரல் இல்லை என்றால் ஏன் மாற்றப்பட்

டிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், ஜே.பி.பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு, அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் தொடர்பான அரசியல் முடிவுகளுக்கு பின்னால் நீதிமன்றம் செல்ல முடியாது என்று கூறினர்

இந்த டியோ பதவு குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க சொல்கிறீர்களா? ஆடியோ பதிவு தொடர்பாக விசாரிக்க 32வது செக்‌ஷனில் மனுவா? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.