புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எமர்ஜென்ஸி வார்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
2 வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ கட்டுக்குள் வந்தாலும், புகை தொடர்ந்து வருவதால் தொடர் கண்காணிப்பில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement