Jailer: ஜெயிலர் ஷூட்டிங்கில் நடந்த ப. பாண்டி சம்பவம்: யாரும் எதிர்பாராததை செய்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் வரும் காவாலா, ஹுகும், ஜுஜுபி, ரத்தமாரே ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்ல
ஜெயிலர் ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. வசந்த் ரவியின் ஷூவை ரஜினி துடைத்ததை தான் யாராலும் ஏற்க முடியவில்லை. மேலும் பேரனுக்கு ரஜினி ஷூ துடைத்ததை பார்த்து க்யூட் என்றவர்கள் வசந்த் ரவியின் ஷூவை ரஜினி தொட்டதும் அதிர்ந்துவிட்டார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த காட்சிக்காக வசந்த் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள் ரசிகர்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் மரியாதை கொடுப்பவர் ரஜினி. மேலும் அனைவரையும் சரி சமமாக நடத்துபவர். அப்படி ஜெயிலர் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன்

விஜய் கார்த்திக் கண்ணன் கூறியதாவது,

ஜெயிலர் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஒரு நாள் அடிக்கும் வெயிலில் 300 பேரை வைத்து ஒரு காட்சியை ஷூட் செய்தோம். ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு சின்ன வசனம் கொடுத்து பேசச் சொன்னார் நெல்சன். அவரால் அந்த வசனத்தை சரியாக பேச முடியவில்லை.

Jailer: 24 வருஷம் கழிச்சு நீலாம்பரி முன்பு இந்த படையப்பா மானமே போச்சு: ரஜினி

இதையடுத்து அவருக்கு பதில் வேறு ஒருவரை அந்த வசனம் பேச வைத்து ஷூட் செய்தோம். ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டாச்சு.

பிரேக் நேரத்தில் நானும், நெல்சனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது உதவி இயக்குநர் ஒருவர் வந்து ரஜினி சார் அந்த ஜூனியர் ஆர்டிஸ்டை கூப்பிடுகிறார் என்றார்.

அதன் பிறகு ரஜினி சார் எங்களிடம் வந்து, அந்த நபர் என்னுடன் சேர்ந்து நடிக்கும் ஆசையில் வந்திருப்பார். இதை வீட்டிலும் சொல்லிவிட்டு வந்திருப்பார். தற்போது அவர் என்னுடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றால் வருத்தப்படுவார். அதனால் அடுத்த காட்சியில் அவரை என் அருகில் நிற்க வையுங்கள். நான் அவர் தோளில் கை போட்டுக் கொண்டு நிற்கிறேன் என்றார்.

அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்வதால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்றார்.

தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்த ப. பாண்டி படத்தில் ஒரு காட்சியில் நடிக்க ராஜ்கிரணை அழைத்திருப்பார்கள். கவுதம் மேனன் இயக்கத்தில் ரோபோ ஷங்கர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ராஜ் கிரணை ஒரு சிறு வசனம் பேசச் சொல்வார்கள். அவர் அந்த வசனத்தை பேச தடுமாறுவார்.

இதையடுத்து ராஜ்கிரணுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைப்பார்கள். அது போன்று தான் ஜெயிலர் படத்தில் நடந்திருக்கிறது. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

Dhanush: மொதல்ல ரஜினி ரசிகன், அப்புறம் தான் மருமகன்னு நிரூபித்த தனுஷ்: என்ன செஞ்சிருக்கார்னு பாருங்க

இந்நிலையில் இந்த வாரம் ஜெயிலர் வாரம் என ட்வீட் செய்திருக்கிறார் தனுஷ். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வருவீர்கள் என நம்புகிறோம் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க தனுஷ் தியேட்டருக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தலைவர் ரசிகனாச்சே, வராமலா போய்விடுவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.