Jailer: நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை..நீங்களே கிளப்பிவிடாதீங்க..வேண்டுகோள் வைத்த ரஜினி..!

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு முன்பதிவு அமோகமாக இருப்பதால் கண்டிப்பாக ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்றே தெரிகின்றது.

இப்படம் துவங்கும்போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது ஜெயிலர் படத்திற்கு பலமடங்கு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. அதற்கு படக்குழு செய்து வரும் ப்ரோமோஷன்களும், படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பும் தான் காரணம் எனலாம்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா

அந்த அளவிற்கு ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக கடந்த வாரம் வெளியான ஜெயிலர் படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

Thalaivar 170: தலைவர் 170 பற்றி பரவும் தகவல்கள்..எல்லாம் வதந்தியாம்..என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்களுக்கு முன்பு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ஆகியோர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார்கள். அது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டானது.

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சி நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் அனைவரும் ரஜினியின் பேச்சை கேட்க இந்நிகழ்ச்சியை ஆவலாக பார்த்தனர். அந்த வகையில் ரஜினி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பல விஷயங்களை பற்றி பேசினார். இது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் பல விஷயங்களை பற்றி பேசிய ரஜினி கழுகு மற்றும் காக்காவை வைத்து ஒரு குட்டி கதையை கூறினார். இந்த கதை தான் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ரஜினி தன்னை கழுகு என்றும், விஜய்யை தான் காக்கா என்றும் குறிப்பிட்டு அந்த கதையை கூறியுள்ளார் என ஒரு சிலர் கிளப்பிவிட இணையத்தில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதல் வெடித்தது.

ரஜினி வேண்டுகோள்

ஏற்கனவே இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு மத்தியில் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்க தற்போது மோதல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரஜினி பேசிய முழு வீடியோவும் நேற்று தான் வெளியானது. அதில் அவர், நான் பொதுவாகத்தான் இந்த கதையை கூறினேன். உடனே நான் இவரை தான் குறிப்பிட்டு சொன்னேன் என மீடியாக்கள் கிளப்பிவிடாதீர்கள் என கூறினார் ரஜினி.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அவர் கூறியதை போலவே சோசியல் மீடியாவில் ஒரு சிலர் கிளப்பி விட தற்போது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.