கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன. இதற்கிடையில், ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5.1.1 வகை மாறுபாடு மே மாதத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரே ஒருவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால் வேண்டியதில்லை என்கின்றனர். எனினும், இதனை பரவாமல் தடுக்க மக்கள் கொரோனா விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. . மகாராஷ்டிராவின் சுகாதார கண்காணிப்பு அதிகாரி பபிதா கம்லாபுர்கர் கூறுகையில், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கோவிட் -19 நெறிமுறையைப் பின் பற்றுவது அவசியம். கொரோனா விதிகளை மக்களை தவறாமல் பின் பற்ற வேண்டும் என்று சுகாதார துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
