நாங்குநேரி சம்பவம்… இளம் மனதில் சாதிய நச்சு… மு.க.ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசித்து வரும் தலித் சமூகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர் முனியாண்டி – அம்பிகாபதி தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். மகன் அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் சிறிய சிறிய பிரச்சினைகள் இருந்து வந்தன. இது சாதிய பகையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நெல்லையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த 8,431 கிலோ கஞ்சா எரியூட்டப்பட்டது

தலித் மாணவன் தாக்குதல்

இதன் தொடர்ச்சியாக தலித் மாணவரை தாக்கியுள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியருக்கு புகாராக சென்றுள்ளது. எங்களை எதிர்த்து எப்படி புகார் அளிக்கலாம் எனக் கூறி மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்த தலித் மாணவன் மற்றும் அவரது தங்கையை சரமாரியாக வெட்டியுள்ளனர். இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லையில் நடந்த பகீர்

இதையடுத்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் மாற்று சமூக மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு போலீசாரால் கைதாகி நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பருவத்திலேயே சாதிய மனப்பான்மையா? என்ற கேள்வியையும், அடுத்த தலைமுறை மீதான பதற்றத்தையும் உண்டாக்குகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையின் கல்லூரி படிப்பு, மருத்துவ செலவை நானே ஏற்கிறேன் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதனுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை மறுபதிவிட்டு முதலமைச்சர்

வெளியிட்டுள்ள பதிவில், நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை உண்டாக்குகிறது.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. சக மனிதரிடம் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் தொடர்வது சகிக்க முடியவில்லை. குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆசிரியர்களுக்கு அறிவுரை

சட்டம் அதன் கடமையை செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பது அனைவரும் கடமையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்டி வளர்க்க வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியும் அடைய முடியாது. பேசும் தாய் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் வரக் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.