Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலையும் ஒரே நாளில் முந்திய 'ஜெயிலர்': தட்டி தூக்கிய தலைவர்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழையை குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ‘ஜெயிலர்’ படத்திற்காக ஒதுக்கப்பட்ட திரைகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியாகி இருந்தது. பேமிலி செண்டிமென்டை மையமாக வைத்து ரிலீசான இந்தப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. மேலும் ‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியின் மாஸான கூஸ்பம்ஸ் காட்சிகள் நிறைந்த படத்தை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவர்களின் இந்த குறையை போக்கும் விதமாக தற்போது ‘ஜெயிலர்’ வெளியாகியுள்ளது. காட்சிக்கு காட்சிக்கு மாஸ், ரஜினியின் அதிரடியான ஸ்டைல் என பக்காவான கமர்ஷியல் படமாக ‘ஜெயிலர்’ ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

டைகர் முத்துவேல் பாண்டியனாக ஜெயிலரில் ரஜினி மாஸ் காட்டிட்டிள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அத்துடன் நெல்சனின் முந்தைய படமான ‘பீஸ்ட்’ ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கியது. இதனால் ‘ஜெயிலர்’ படம் எப்படி வரும் என்ற பயம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலரை இயக்கி தரமான கம்பேக் கொடுத்துள்ளார் நெல்சன்.

Jailer: முதல் நாளே ‘ஜெயிலர்’ படம் படைத்த சாதனை: அடேங்கப்பா… தலைவர் சம்பவம்.!

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் தகவலாக அமெரிக்காவில் ‘வாரிசு’ படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ‘ஜெயிலர்’ படம் ஒரே நாளில் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு மொத்தமாக $1,141,590 வசூலித்திருந்த நிலையில், ஜெயிலர் படம் முதல் நாளில் மட்டும் $1,158,000 வசூலித்து சாதனை படைத்த்துள்ளது.

இந்த தகவல் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் இந்த சாதனை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடித்துள்ள நிலையில் மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். சில நிமிடங்கள் மட்டுமே வரும் வகையில் இவர்கள் காட்சி வைக்கப்பட்டிருந்தாலும், தியேட்டரில் இவர்கள் சம்பந்தமான காட்சிகளுக்கு செம்மையான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Gayathrie: அஜித் எடுத்த தவறான முடிவு.. நெகட்டிவ் விமர்சனத்திற்கு நடிகை காயத்ரி கொடுத்த பதிலடி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.