ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா – செம கம்பேக்!

ஆசிய ஹாக்கி தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோததின. இந்த போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஆரம்பம் முதலே மலேசியா அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. அதற்கேற்ப இந்திய அணியின் தடுப்பு அரண்களில் சில தவறுகள் நடந்ததால் அந்த அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து திகைக்க வைத்தது. முதல் பாதி முடிவில் இந்தியா 1-3 என பின் தங்கியே இருந்தது. அப்போது இந்திய ரசிகர்கள் அனைவருமே மலேசியா தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதினர்.

இரண்டாம் பாதியில் மலேசியா தடுப்புகளில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தும் என்பதால் இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவாக இருந்தது என யூகிக்கப்பட்டது.  ஆனால் இந்திய அணியின் ஆட்டமே வேறு மாதிரி இருந்தது. மலேசியாவின் தடுப்புகளை உடைக்கும் விதமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை கையில் எடுத்தது இந்திய அணி. அதற்கேற்ப இந்திய அணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த இந்திய ஹாக்கி அணி 2வது கோலை 45வது நிமிடத்தில் தான் அடித்த்து.

அந்த கோலை கொண்டாடி தீர்ப்பதற்குள் இந்திய அணி அதே நிமிடத்தில் இன்னொரு கோலை அடித்தது அசத்தியது. அதனால் 3-3 என ஆட்டம் சமநிலையை வந்ததடைந்தது. இப்போது தான் இந்திய அணி ரசிகர்களே பெருமூச்சு விட்டனர். அதுவரை இந்திய அணி தோல்வியை தழுவும் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் இனி வெற்றி பெறலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இன்னும் ஒரு கோலை அடித்தால் இரு அணிகளுக்குமே வாய்ப்பு என்று இருந்த நிலையில், இந்திய அணி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. 

 

— Itszzz sharif (@Javeed_Sharif_) August 12, 2023

ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து முன்னிலை பெற்றது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றி அசத்தியது. 

#AsianChampionshipTrophyChennai ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியை காண சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்திற்கு வருகை தந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்தினோம். அவர்களை கவுரவிக்கும் விதமாக 7-ஆவது ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டியின்… pic.twitter.com/iXdhyO0rjP

— Udhay (@Udhaystalin) August 12, 2023

இந்திய அணியில் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.