2024 மக்களவை தேர்தலில் மத்தியிலும், தமிழகத்திலும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தற்காலிக தீர்வு சொல்லும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
சிக்ஸர் அடித்த எதிர்கட்சிகள்..சிக்க வைக்கும் பாஜக – NDA vs INDIA
கருத்துக்கணிப்பு முடிவுகள்
சமீபத்தில் இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வந்தது. இந்நிலையில் டைம்ஸ் நவ் – இடிஜி பவுண்ட் இணைந்து மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தின் நிலவரம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
வாக்கு சதவீதத்தை கூட்டணி வாரியாக எடுத்து கொண்டால்,
கூட்டணிவாக்கு சதவீதம் (%)இந்தியா கூட்டணி57.20தேசிய ஜனநாயக கூட்டணி27.80மற்ற கட்சிகள்15.00
வாக்கு சதவீதத்தை கட்சி வாரியாக எடுத்து கொண்டால்,
அரசியல் கட்சிகள்வாக்கு சதவீதம் (%)திமுக33.50அதிமுக17.30காங்கிரஸ்15.60பாஜக8.90மற்ற கட்சிகள்24.70
யாருக்கு எத்தனை இடங்கள் என்று எடுத்து கொண்டால்,
அரசியல் கட்சிகள்மக்களவை தொகுதிகள்திமுக20 – 24காங்கிரஸ்9 – 11அதிமுக4 – 8பாஜக0 – 1
கடந்த 2019 மக்களவை தேர்தலை சீட் வாரியாக வரும் 2024 மக்களவை தேர்தலுடன் ஒப்பிட்டால்,
மக்களவை தேர்தல்NDA (தொகுதிகள்)INDIA (தொகுதிகள்)20191372024 (கருத்துக்கணிப்பு)4 – 830 – 34
இதேபோல் வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டால்,
மக்களவை தேர்தல்NDA (வாக்குச் சதவீதம்)INDIA (வாக்கு சதவீதம்)201927.953.3202427.857.2
இவ்வாறு முடிவுகள் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. தேசிய அளவில் எடுத்து கொண்டால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் – இடிஜி பவுண்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மோடி ஆட்சி
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக தனித்து கைப்பற்றும். அதுவே தேசிய ஜனநாயக கூட்டணியாக எடுத்து கொண்டால் 353 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாம். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை எடுத்துக் கொண்டால் 160 முதல் 190 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா நிலவரம்
கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி 20 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெறும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 28 முதல் 32 வரையிலும், இந்தியா கூட்டணி 15 முதல் 19 வரையிலும் தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளன.
பிகார், மேற்குவங்க முடிவுகள்
பிகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் தேசிய ஜனநாயக கூட்டணி 22 முதல் 24 இடங்களையும், இந்தியா கூட்டணி 16 முதல் 18 இடங்களையும் கைப்பற்றும். மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.